கனடா செய்திகள்

“Toronto தீவு விமான நிலைய விரிவாக்கத்திற்காக Ontario அரசாங்கம் பூங்காவைச் சிதைக்காது” – முதல்வர் Doug Ford உறுதி.

Toronto வின் தீவு விமான நிலைய விரிவாக்கத்திற்காக, ஒரு கடற்கரை பூங்காவின் மூன்றில் ஒரு பகுதியைத் தனது அரசாங்கம் சட்டத்தின் கீழ் கையகப்படுத்த முடியுமெனினும், அது தொடர்ந்து பூங்காவாகவே இருக்கும் என்று Ontario முதல்வர் Doug Ford தெரிவித்துள்ளார்.

​Billy Bishop Toronto City விமான நிலையத்தில் Toronto மாநகரத்தின் பங்கை மாகாண அரசு பொறுப்பேற்க அனுமதிக்கும் மசோதா ஒன்று தற்போது மாகாணசபையில் உள்ளது. ஜெட் விமானங்கள் தரையிறங்குவதற்கு வசதியாக விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய Ford அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம், கடற்கரையோரத்தில் உள்ள Little Norway Park பூங்காவின் மூன்றில் ஒரு பகுதியை மாகாண அரசு கையகப்படுத்தவும் வழிவகை செய்யலாம். இது இரண்டாம் உலகப் போரின்போது Norwegian  விமானப்படையால் பயன்படுத்தப்பட்ட ஒரு பயிற்சித் தளமாகும். தற்போது இந்தப் பூங்காவில் ஒரு baseball திடல், நடைபாதைகள், சிறுவர் நீச்சல் குளம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவை அமைந்துள்ளன.

Toronto மாநகர முதல்வர் Olivia Chow, இந்தச் சட்டத்தை “Toronto மக்களிடம் கலந்தாலோசிக்காமல் மாநகர நிலத்தைப் பறிக்கும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை” என்று விமர்சித்துள்ளார். அத்துடன், அந்தப் பூங்காவைச் சிதைக்க வேண்டாம் என்றும் அவர் மாகாண அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், Billy Bishop Toronto City விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்குத் தேவையான நிலத்தை மட்டுமே பயன்படுத்துவதற்கு மாகாண அரசாங்கம், Toronto மாநகர சபையுடன் இணைந்து செயல்படும் என்று போக்குவரத்து அமைச்சர் Prabmeet Sarkaria வின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

June 27 அன்று நடைபெறவுள்ள தேசிய பல் பராமரிப்புக்கு குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் தகுதி உடையவர்கள்

admin

கனடா–அமெரிக்க கூட்டு இராணுவ அதிகாரிகளின் உச்சி மாநாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

canadanews

நீண்ட தூர மரதன் ஓட்டத்தில் கலந்து கொண்டு பலரை ஆச்சரியப்படுத்திய Carney.

canadanews