பிரதமர் Mark Carney, கனடாவின் அடுத்த ஆளுநர் நாயகமாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி Louise Arbour நியமித்துள்ளார்.
Arbour ஐநா மனித உரிமைகள் ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளார், மேலும் Rwanda மற்றும் Yugoslavia வில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை விசாரித்துத் தண்டனை பெற்றுத் தந்தவராவார்.
கனடாவின் முதல் பழங்குடியின ஆளுநர் நாயகமாக தற்போது பதவி வகிக்கும் Mary Simon அவர்களின் ஐந்து ஆண்டுகால பதவிக்காலம் July மாதத்துடன் முடிவடையும் நிலையில், Simon இற்கு பதிலாக Arbour பதவியேற்கவுள்ளார்.
Simon இற்கு பிரெஞ்சு மொழி பேசுவதில் இருந்த சிரமங்கள் குறித்த சர்ச்சையைத் தொடர்ந்து, அடுத்த பிரதிநிதி இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகளிலும் (ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு) பேசக்கூடியவராக இருப்பார் என்று பிரதமர் தெரிவித்தார். Simon ஆங்கிலம் மற்றும் Inuktitut மொழிகளைப் பேசுபவர். அவர் பிரெஞ்சு மொழியை கற்றுக்கொண்ட போதிலும், அதில் சரளமாகப் பேசும் திறனைப் பெற்றுக்கொள்ளவில்லை.
ஆளுநர் நாயகம், பிரதமரின் ஆலோசனையின் பேரில் மன்னரால் நியமிக்கப்படுகிறார் இவர் பொதுவாக ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தைக் கொண்டவர் ஆவார்.
