கனடா செய்திகள்

நாடளாவிய ரீதியில் கனடாவில் பெட்ரோல் விலை சராசரியாக $2 என்ற எல்லையை அண்மித்துள்ளது.

புதன்கிழமை காலை நிலவரப்படி கனடாவில் பெட்ரோல் விலை தேசிய அளவில் சராசரியாக லீட்டருக்கு $1.91 ஆக உயர்ந்ததால், சாரதிகள் பெரும் சுமையை எதிர்கொண்டுள்ளனர். இது ஏற்கெனவே இருந்த விலையை விட இரண்டு சதங்கள் அதிகமாகும்.

​GasBuddy அமைப்பின் தரவுகளின்படி, ​British Columbia புதன்கிழமை காலை கனடாவிலேயே மிக உயர்ந்த விலையாக லீட்டருக்கு சராசரியாக $2.12 ஆக பதிவானது.

​Newfoundland மற்றும் Labrador இதற்கு அடுத்தபடியாக லீட்டருக்கு $2.05 என்ற விலையில் விற்பனையானது. Alberta ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது பொதுவாக விலை குறைவாக இருக்கும் Alberta விலும் கூட, ஒரு லீட்டர் எரிபொருளின் விலை $1.81 ஆக இருந்தது.

International Energy Agency யின் இயக்குனர் இதுகுறித்து வரலாற்றிலேயே மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடி என்று குறிப்பிட்டிருக்கும் சூழலில் Iran போர் தொடங்கியதில் இருந்து, உலகின் மிக முக்கியமான கடல் வழியாகக் கருதப்படும் Hormuz நீரிணை வழியாக எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் பெருமளவில் முடக்கப்பட்டுள்ளன. இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைக் குறைத்துள்ளது.

Hormuz நீரிணையில் சிக்கித் தவிக்கும் கப்பல்களை அந்தப் பாதையிலிருந்து வெளியேற்ற அமெரிக்கப் படைகள் வழிகாட்டும் என்று அமெரிக்க அதிபர் Donald Trump கூறியிருந்தார். இருப்பினும், Iran உடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை அந்த முயற்சியை நிறுத்தி வைப்பதாக அவர் செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தார்.

Canadians for Affordable Energy அமைப்பின் தலைவர் Dan McTeague, சந்தை நிலவரம் சீராக இருந்தால் வியாழக்கிழமையன்று பெட்ரோல் விலை சில சதங்கள் குறையும் என்று கணித்துள்ளார். செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின் போதும் எண்ணெய் விலையில் சற்றே தளர்வு ஏற்பட்டது. இருப்பினும், தேசிய சராசரி விலை லீட்டருக்கு $2 என்ற எல்லையைத் தொடுவதற்கு அண்மித்துள்ளது என்று McTeague எச்சரித்துள்ளார்.

Related posts

ஓராண்டுக்குள் கனடாவுடன் விரிவான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக்கூடும் – இந்தியத் தூதுவர்.

canadanews

உலகளாவிய ரீதியில் ஏற்ப்பட்ட IT செயலிழப்பைத் தொடர்ந்து கனடாவின் விமான நிலையங்கள், மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மீண்டும் தொடக்கம்

admin

கனேடியர்களை ஒன்றிணைத்த Tumbler Ridge துப்பாக்கிச்சூட்டு சம்பவம்.

canadanews