கனடா செய்திகள்

Liberal கட்சியின் Scarborough Southwest தொகுதிக்கான மாகாண வேட்பாளர் தெரிவு குறித்து மேன்முறையீடு.

சனிக்கிழமை நடைபெற்ற Scarborough Southwest இடைத்தேர்தலுக்கான மாகாண வேட்பாளர் தெரிவில் தோல்வியடைந்ததையடுத்து, Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Nate Erskine-Smith, Ontario, Liberal கட்சியிடம் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

​அந்தத் தொகுதியில் உள்ள Ontario, Liberal கட்சி உறுப்பினர்கள், எதிர்வரும் இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்களது வேட்பாளராக வணிக உரிமையாளர் Ahsanul Hafiz என்பவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.

சனிக்கிழமை நடைபெற்ற வேட்பாளர் தெரிவில், பதிவான 1,400-க்கும் மேற்பட்ட வாக்குகளில் தான் 19 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாகக் கூறி, அந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக Erskine-Smith அறிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் குறித்து பல கதைகள் உலவுகின்றன, என்று குறிப்பிட்ட Erskine-Smith தான் இது குறித்து விரிவாக ஆராய வேண்டும், எனவும் தான் சில கண்காணிப்பாளர்களிடம் ஏற்கனவே பேசியதாகவும், அவர்கள் இதுபோன்ற ஒரு தேர்தலை இதுவரை பார்த்ததே இல்லை என்றும், உள்ளே நடந்தது நம்பமுடியாதது என்றும் அவர்கள் கூறியதாக Erskine-Smith தெரிவித்தார்.

​அடையாள அட்டை தொடர்பான பிரச்சினைகளுடன் அதிகளவிலான வாக்காளர்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்ட போதிலும், Erskine-Smith இன் பிரதம கண்காணிப்பாளர்கள் அனைத்து முடிவுகளிலும் கையெழுத்திட்டு அங்கீகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், Ontario, Liberal கட்சித் தலைமைக்கான போட்டியில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் முன்னாள் மருத்துவமனைத் தலைவருமான Lee Fairclough மற்றும் அரசியல் ஆலோசகரும் முன்னாள் அரசியல் உத்தியோகத்தருமான Dylan Marando ஆகிய இருவர் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளனர்.


​இவர்களை விட முன்னாள் மத்திய அமைச்சர் Navdeep Bains, கட்சி உறுப்பினர் Rob Cerjanec மற்றும் வீட்டுவசதி ஆலோசகர் Eric Lombardi உள்ளிட்ட மேலும் சிலர் இப்போட்டியில் பங்குபெறுவது குறித்து ஆராய்ந்து வருவதாக இடைக்காலத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கனடாவின் பணவீக்க விகிதம் 1.9 சதவீதமாக மீண்டும் உயர்ந்துள்ளது

canadanews

Brampton தமிழர் இனப்படுகொலை நினைவுச் சின்னம் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

canadanews

பிரதமருடனான சந்திப்பை கடந்த தசாப்த்தத்தின் சிறந்த சந்திப்பு என வர்ணிக்கிறார் Doug Ford.

canadanews