கனடா செய்திகள்

Ottawa வில் எதிர்கால விண்வெளிப் பயணங்கள் குறித்து Hansen மற்றும் Artemis II குழுவினர் கலந்துரையாடல்.

கடந்த மாதம் நிலவின் மறுபக்கத்திற்குப் பயணம் செய்து உலக மக்களின் கற்பனைத்திறனைத் தூண்டிய விண்வெளி வீரர்கள், விண்வெளிப் பயணத்தின் எதிர்காலம் குறித்துப் கலந்துரையாடுவதற்காக புதன்கிழமையன்று Ottawa விற்கு வருகை தந்தனர்.

​கனேடியரான Jeremy Hansen மற்றும் அவரது Artemis II குழுவினர் தலைநகரில் தொடர்ச்சியான நிகழ்வுகளில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளனர். இதன் ஆரம்பமாக இன்று காலை பிரதமர் Mark Carney அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர்.

இந்த 10 நாள் பயணமானது, Hansen, குழுவின் தளபதி Reid Wiseman மற்றும் விண்வெளி வீரர்களான Victor Glover மற்றும் Christina Koch ஆகியோரை மனித வரலாற்றில் இதற்கு முன்னர் எவரும் சென்றிராத அளவிற்கு பூமியிலிருந்து வெகு தொலைவிற்கு அழைத்துச் சென்றது.

​Artemis II பயணத்தின் போது Houston இல் உள்ள நாசாவின் விண்வெளி கட்டுப்பாட்டு மையக் குழுவில் ஒருவராக இருந்த கனேடிய விண்வெளி ஆய்வு மையத்தின் விண்வெளி வீரர் Jenni Gibbons உம் இந்த Ottawa பயணத்தில் பங்கேற்றுள்ளார்.

​விண்வெளி வீரர்களைத் தலைநகருக்கு வரவேற்பதில் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்த Carney, NASA உடனான எதிர்கால விண்வெளிப் பயணங்களில் கனடா எவ்வாறான பங்களிப்புகளை வழங்க முடியும் என்பது குறித்து அவர்களுடன் ஆலோசிக்க உள்ளதாகக் கூறினார்.

Artemis III விண்கலப் பயணம் அடுத்த ஆண்டு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இது 2028-ஆம் ஆண்டு விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் செல்லவிருக்கும் Artemis IV திட்டத்திற்கு முன்னதாக மேற்கொள்ளப்படவுள்ளது.

​குழு உறுப்பினர்களுக்கு Carney நினைவுப் பரிசாக வெள்ளி நாணயங்களை வழங்கினார். அந்த நாணயங்களின் ஒரு பக்கத்தில் விண்வெளி வீரரின் வண்ணப் படமும், மறுபக்கத்தில் Charles மன்னரின் உருவமும் இடம்பெற்றிருந்தன. அத்துடன், Artemis விண்கலம் California கடற்கரைக்கு அப்பால் கடலில் இறங்கிய அன்று, Peace Tower இல் பறந்துகொண்டிருந்த கனேடிய தேசியக் கொடியையும் அவர் Hansen இடம் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது, பயணம் முழுவதும் விண்கலத்திற்குள் இருந்ததாகக் கூறப்படும் கனேடிய தேசியக் கொடியின் அடையாளச் சின்னத்தை Hansen பிரதமருக்கு வழங்கினார்.

Related posts

சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதில் கனடா கரிசனை கொள்ள வேண்டும்

canadanews

NATO வின் ஐந்து சதவீத இலக்கை அடைய புதிய வழியைக் கண்டு பிடித்துள்ள கனடா.

canadanews

மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடிக்கு Trudeau வாழ்த்து தெரிவிப்பு

admin