கனடாவின் அடுத்த Submarine கடற்படைக்கான நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டமைப்பதற்கான விலைமனுக்கோரல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த இலாபகரமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இரு நிறுவனங்களின் விலைமனுக்களை மத்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
தகுதி பெற்றுள்ள விலைமனுதாரர்களான South Korea வின் ‘Hanwha Oceans’ மற்றும் Germany யின் ‘TKMS’ ஆகிய இரு நிறுவனங்களும் Royal Canadian கடற்படைக்கு சுமார் 12 நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்குவதற்காக வழக்கத்திற்கு மாறாகக் குறுகிய காலத்தில் நடத்தப்பட்ட இந்தப்போட்டியில் மிகக் கடுமையாக மோதிக்கொண்டன.
பல்லாயிரக்கணக்கான கோடி டொலர்கள் மதிப்புடையதாக எதிர்பார்க்கப்படும் ஒரு மிகப்பெரிய கொள்வனவு இதுவாகும். போட்டி ஏலங்கள் குறித்த மத்திய அரசாங்கத்தின் உள்ளகப்பகுப்பாய்வு தற்போது நிறைவடைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வளவு பெரிய அளவிலான ஒரு கொள்முதல் திட்டத்திற்கு வழக்கத்திற்கு மாறாக மிக வேகமான முறையில் பிரதமர் Mark Carney யின் அரசாங்கம் இந்தத் திட்டத்தை முன்னோக்கி நகர்த்தி வருகிறது. இராணுவ உபகரணங்கள் கொள்முதலுக்கான Carney யின் முக்கிய பொறுப்பாளரான வெளியுறவுத்துறைச் செயலாளர் Stephen Fuhr, கடந்த வாரம் பேசுகையில், June மாத இறுதிக்குள் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறினார்.
கனடாவின் தற்போதைய நீர்மூழ்கிக் கப்பல்கள் பழமையானதாகவும், துருப்பிடித்தும், இயக்கத்திற்குப் பயன்படாத நிலையிலும் இருப்பதால், அவற்றை மாற்றுவதற்கு மத்திய அரசாங்கம் ஒரு கடுமையான போட்டி நிலையில் ஈடுபட்டுள்ளது.
கனடாவிடம் தற்போதுள்ள நான்கு ‘Victoria class’ நீர்மூழ்கிக் கப்பல்களின் ஆயுட்காலம் 2035 ஆம் ஆண்டிற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவற்றில் ஒன்று மட்டுமே இயங்கு நிலையில் உள்ளது. எனவே மீதமுள்ள நீர்மூழ்கிக் கப்பல்களில் சிலவற்றை உதிரி பாகங்களுக்காகப் பிரித்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அரசாங்கம் தள்ளப்படலாம்.
நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டமைப்பதற்கான திட்டம் கண்ணைக் கட்டும் அளவுக்கு மிக அதிக செலவு வைக்கக்கூடியதாக இருக்கும். அதே நேரத்தில், அவை கனடாவின் பொருளாதாரத்திற்கு நம்ப முடியாத அளவிலான மதிப்பையும் நன்மைகளையும் கொண்டு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
