கனடா செய்திகள்

கனடா ‘51-வது மாநிலம்’ என்ற எச்சரிக்கையை மீண்டும் கையில் எடுத்துள்ள Donald Trump.

May 29 அன்று கனடா நாடு ஒரு தொழில்நுட்ப மந்தநிலைக்குள் சரிந்ததைத் தொடர்ந்து, கனடாவை அமெரிக்காவின் “51-வது மாநிலமாக” மாற்றுவதற்கான தங்களது அழைப்பை அமெரிக்க அதிபர் Donald Trump மீண்டும் புதுப்பித்துள்ளார்.

​திங்கட்கிழமை இரவு Trump தனது Truth Social தளத்தில், “கனடா 2020-க்குப் பின்னர் முதல் முறையாக தொழில்நுட்ப மந்தநிலைக்குள் சரிந்தது” என்ற தலைப்பிலான Bloomberg நிறுவனத்தின் வார இதழ் கட்டுரைக்கான இணைப்பைப் பகிர்ந்து, அதனுடன் 51-வது மாநிலம் என்ற வார்த்தைகளையும் பதிவிட்டிருந்தார். அதேநேரம், இப்பதிவை கனடாவுக்கான அமெரிக்க தூதுவர் Pete Hoekstra மீண்டும் பகிர்ந்துள்ளார்.

இந்த இரு விமர்சனங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட Ontario மாகாண முதல்வர் Doug Ford கனடா ஒருபோதும் 51-வது மாநிலமாக மாறாது. கனடா விற்பனைக்கு அல்ல என்று பதிவிட்டுள்ளார். அதேவேளை பிரதமர் Mark Carney, கூறும்போது, Trump சமூக ஊடகங்களை வியக்கத்தக்க வகையில் தீவிரமாகப் பயன்படுத்துபவர் என்றும், அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் கனேடிய அரசாங்கம் எதிர்வினை ஆற்றாது என்றும் கூறினார்.

இதேவேளை, பாதுகாப்பு காரணங்களுக்காக Greenland தீவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர Trump ஆர்வம் காட்டியுள்ளதால், NATO கூட்டணியில் உள்ள Denmark நாட்டின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான Greenland ஐ வாங்குவதிலும் அமெரிக்கா தனது பார்வையை செலுத்தியுள்ளது.

​அமெரிக்கா மற்றும் Mexico நாடுகளுடன் கனடா ‘CUSMA’ பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவிருக்கும் சூழலில், கனடா குறித்த இக்கருத்து மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளமை அரசியல் தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பிராந்திய விரிவாக்கத்தைத் தூண்டும் நோக்கிலான ஈரானின் தாக்குதல் – G7 நாடுகள் எச்சரிக்கை

admin

எதிர்கால விகிதக் குறைப்புகளைக் குறிக்கும் வகையில் Bank of Canada ஆனது jumbo வட்டி விகிதக் குறைப்பைச் செயல்படுத்தியுள்ளது

admin

கனடா தபால் ஊழியர்கள் உத்தியோகபூர்வமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவிப்பு

admin