அமெரிக்காவின் Army National Guard, ஆண்டுதோறும் நடைபெறும் கனடா–அமெரிக்க இராணுவ அதிகாரிகள் உச்சி மாநாட்டை ஒத்திவைத்துள்ளது. கனடாவின் Department of National Defence இந்த மாநாடு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
அடுத்த மாநாடு இரு நாடுகளின் பயிற்சி அட்டவணைகளை கருத்தில் கொண்டு திட்டமிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கனேடிய தேசிய பாதுகாப்பு ஆய்வாளர் Christy Somos இந்த மாநாடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முதலில் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், கனேடிய அரசாங்கம் பல்வேறு வகை போர் விமானங்களைக் கொண்ட கலப்பு போர் விமானப் படையை உருவாக்கும் வாய்ப்பை பரிசீலித்து வருவதாக பல கனேடிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
Army National Guard அந்த மாநாட்டை மீண்டும் திட்டமிடும் என்று கூறுகிறது. மேலும், அந்த முடிவு விமானங்கள் வாங்குவது பற்றிய எந்த திட்டங்களுடனும் தொடர்புபடவில்லை என்று அது வலியுறுத்துகிறது. இதுகுறித்து Pentagon இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும், கனடாவின் கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்க பாதுகாப்புத் துறையின் உயர்மட்ட கொள்கை அதிகாரி ஒருவர், கனடா தனது பாதுகாப்பு கடமைகளில் நம்பகமான முன்னேற்றத்தை காட்டவில்லை என்று கூறி, May மாதத்தில் கனடா–அமெரிக்க கூட்டு பாதுகாப்பு சபையை தற்காலிகமாக நிறுத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
