புதன்கிழமை, மத்தியரசின் சுத்தமான எரிபொருள் விதிமுறைகள் (Clean Fuel Regulations) திட்டத்தில் தாங்கள் இணையவுள்ளதாக Ottawa மாநகர சபை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், போக்குவரத்தில் புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் உறுதிப்படுத்தப்பட்ட சுத்தமான ஆற்றலை பயன்படுத்துவதன் மூலம் மாநகர சபைகள் கிரெடிட்களை (credits) பெற்று அவற்றை விற்பனை செய்ய முடியும்.
Ottawa தனது Zero-Emission பேருந்துத் திட்டத்திலிருந்து கிடைக்கும் கிரெடிட்களை விற்பனை செய்து, அதனால் கிடைக்கும் வருவாயை மின்சார பேருந்துகளுக்கான மூலதனமாக பயன்படுத்தவுள்ளது.
இது, நகரத்தின் நிறுவன ரீதியான Greenhouse வாயு வெளியேற்றக் குறைப்புகளை அறிக்கையிடும் திறனிலிருந்து தனித்துவமானதாகும். Greenhouse திட்டமும் இதே கிரெடிட்களுடன் தொடர்புடையவை என்றாலும், கிரெடிட் விற்பனையால் கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்தும் இந்த முயற்சி அதிலிருந்து வேறுபட்டதாகும்.
Ottawa மாநகர சபையின் தகவலின் படி, July மாதத்தில் இந்த திட்டத்தில் பதிவு செய்யப்பட்டால், கிரெடிட்கள் மூலம் இந்த ஆண்டில் சுமார் 1.3 மில்லியன் டாெலர் வருவாயை ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருவாய் 2027 ஆம் ஆண்டில் 3.9 மில்லியன் டாெலராக உயரக்கூடும். மேலும், மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை 350 ஆக அதிகரித்தால், ஆண்டுதோறும் சுமார் 4.3 மில்லியன் டாெலர் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்படுகிறது.
மேலும், சுத்தமான எரிபொருள் விதிமுறைகள் மூலம் சந்தையில் கூடுதல் திட்டங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பும் உள்ளது. இதன் மூலம் மேலும் வருமானத்தை ஈட்டி, காபன் வெளியேற்றத்தைக் குறைக்கும் (emission-reduction) புதிய முயற்சிகளுக்கும் நிதியளிக்க முடியும்.
