கனடா செய்திகள்

மிகக் குறைந்த செல்வாக்குடைய மாகாண முதல்வர் என்ற கருத்துக்கணிப்பை Doug Ford நிராகரிக்கின்றார்.

அண்மைய கருத்துக்கணிப்பில் தனது செல்வாக்கு சரிந்துள்ளதாகக் காட்டுவதை ஒரு போலிச்செய்தி என Ontario மாகாண முதல்வர் Doug Ford தெரிவித்துள்ளார். அத்துடன், இன்று தேர்தல் நடத்தப்பட்டாலும் தானும் தனது கட்சியும் நான்காவது முறையாக மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுக்கொள்வோம் என்றும் அவர் கூறினார்.

​Conservative கட்சியினதும், Ford இனதும் செல்வாக்கு சரிந்து வருவதைக் காட்டும் பல பொதுக் கருத்துக்கணிப்புகளை விட தங்களது சொந்தக் கட்சியின் உள்வட்டக் கருத்துக்கணிப்புகளும் பிற நிறுவனங்களின் கணிப்புகளும் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையைக் கூறுவதாக அவர் உரிமை கோரினார்.

செய்தியாளர் ஒருவர் இது பற்றிக் கேட்டபோது, “மக்களே, ஒருமுறை அவர்கள் இந்த கணிப்பை எப்படி நடத்தினார்கள் என்ற விவரத்தை நான் தெரிந்துகொண்டேன். அவர்கள் downtown இல் உள்ள தீவிர NDP ஆதரவுப் பகுதிக்குத்தான் சென்றார்கள். அவர்கள் இதனை மாகாணம் முழுவதும் செய்யவில்லை. இதெல்லாம் சின்னச் சின்ன விளையாட்டுகள், நீங்களும் இதை அப்படியே பரப்புகிறீர்கள்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அவரது கட்சி தங்களுடைய உள்வட்டக் கருத்துக்கணிப்பு விவரங்களைப் பொதுவெளியில் பகிரவில்லை என்றாலும், தாங்கள் மீண்டும் ஒரு பெரும்பான்மை வெற்றியைப் பெறுவது முற்றிலும் நியாயமானதுதான் என்று Ford கூறினார்.

​”நாங்கள் மீண்டும் ஒரு மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதற்கான காரணத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். நாங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம், வரிகளை உயர்த்தவில்லை, மக்களின் கைகளில் பணத்தைச் சேர்க்கிறோம். நாம் ஒரு சிறந்த பொருளாதார வளர்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று Ford மேலும் கூறினார்.

Related posts

Scarborough-Rouge Park இல் வட்டாரம்-25 இற்கான இடைத்தேர்தலில் நான்கு தமிழர்கள் போட்டி.

canadanews

அமெரிக்கத் தூதுவர் Ottawa வில் பங்கேற்க இருந்த உரையாடல் நிகழ்வு திடீரென இடைநிறுத்தம்.

canadanews

மத்திய அரசினால் மலிவு விலை வீடுகளாக மாற்ற 56 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

admin