கனடா செய்திகள்

Ontario மற்றும் Quebec இன் பெரும்பாலான பகுதிகளை தாக்கும் கடுமையான வெப்ப அலை ஏனைய மாகாணங்களையும் பாதிக்கும்!

இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து Ontario வில் நிலவும் கடுமையான வெப்ப அலை, தணியும் அறிகுறியே இல்லாமல் தற்போது மேலும் கிழக்கு நோக்கிப் பரவியுள்ளது.

Ontario மற்றும் Quebec இன் பெரும்பாலான பகுதிகளுக்கும், தற்போது New Brunswick, Nova Scotia மற்றும் Prince Edward Island ஆகிய பகுதிகளுக்கும் Environment Canada அதிக வெப்ப எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

Ontario வில் Windsor முதல் Ottawa வரையிலும், Thunder Bay முதல் Timmins மற்றும் southern James Bay வரையிலும் பகல் நேர வெப்பநிலை 35°C அளவில் பதிவாகியுள்ளது. காற்றில் உள்ள ஈரப்பதம் (humidex) இந்த வெப்பத்தை இன்னும் அதிகமாக உணர வைக்கிறது.

Montreal மற்றும் Quebec உட்பட Quebec இன் பெரும்பாலான பகுதிகளில் விடுக்கப்பட்டுள்ள இதேபோன்ற வெப்ப எச்சரிக்கைகள், அங்கு அதிகபட்ச வெப்பநிலை சுமார் 33°C ஆகவும், காற்றில் உள்ள ஈரப்பதத்தின் தாக்கம் 45°C அளவிலும் இருக்கும் என்று கணித்துள்ளன.

மேலும், New Brunswick, Prince Edward Island, மற்றும் Nova Scotia வின் முக்கிய நிலப்பகுதிகளில் உள்ள மக்களும் இந்த கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று Environment Canada தெரிவித்துள்ளது. இந்த வெப்பமான மற்றும் ஈரப்பதம் நிறைந்த சூழல் வார இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Israel மற்றும் Lebanon உடனடியாக 21 நாள் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டுமென கனடாவும் அதன் நட்பு நாடுகளும் கோரிக்கை விடுப்பு

admin

Lebanon இல் இரண்டு கனேடியர்கள் கொல்லப்பட்டனர்- பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றம், இஸ்ரேல் படையெடுப்பு பற்றி யோசனை

admin

போர்ப்பதற்றம் நிலவும் பிராந்தியங்களில் உள்ள கனேடியர்களுக்கு மத்தியரசு உதவும்.

canadanews