குழாய் வழித்தட திட்ட அறிவிப்புக்கு முன்னதாக, Alberta மாகாண முதலமைச்சர் Danielle Smith இற்கு Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதே நேரத்தில், இந்த குழாய் வழித்தட திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் Calgary செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவிருக்கும் பிரதமர் Mark Carney க்கு அவர் கூறிய வார்த்தை: “வழியை விட்டு விலகுங்கள்.” என்பதாகும்.
அதாவது, அனைத்து முன்மொழிவுகளையும் அனுமதித்து, அவர் வழியை விட்டு விலக வேண்டும் என்பதே எங்களது கருத்து” என்று அவர் தனது Battle River-Crowfoot தொகுதியிலிருந்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
புதிய குழாய்த் திட்டம் குறித்து தான் இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை என்று கூறிய Poilievre, அதனை பார்த்த பின்னர் அதற்குரிய பதிலை அளிப்பதாகவும் அவர் கூறினார். அதேநேரம், Alberta மாகாணத்திற்காகவும் அதன் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைக்காகவும் தொடர்ந்து போராடி வருவதற்காக Smith இற்கு அவர் முன்கூட்டியே தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
புதிதாக முன்மொழியப்பட்டுள்ள இந்த குழாய்த் திட்டம், ஆசிய நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்வதற்காக, Alberta வின் எண்ணெய் மணல் பகுதியிலிருந்து தினசரி பத்து இலட்சம் பரல்கள் வரையிலான எண்ணெய்யை, இன்னும் தீர்மானிக்கப்படாத ஒரு மேற்கு கடற்கரை துறைமுகத்திற்கு கொண்டு செல்லும் எனத் தெரிகிறது.
Alberta வில் Poilievre அடுத்ததாகச் செல்லவிருக்கும் இடம் Tofield ஆகும். Edmonton க்கு தென்கிழக்கே அமைந்துள்ள இந்த நகரம், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக, தனது Canada Day கொண்டாட்டங்களை இரத்துச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
