Vancouver இல் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பின் போது, எரிசக்தி, இயற்கை வளங்கள், தொழிலாளர் நலன் மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய துறைகளில் கனடாவும் Philippines உம் வியாழக்கிழமை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலான காலத்தில் Philippines நாட்டின் அரச தலைவர் ஒருவர் கனடாவிற்கு மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ பயணமாக இது அமைந்துள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் Ferdinand Marcos Jr ஐ கனேடிய பிரதமர் Mark Carney வரவேற்றார்.
கனடாவின் மையப் புள்ளியாக Philippines கனேடியர்கள் விளங்குவதாகக் குறிப்பிட்ட Carney, ஒரு முறையான நட்புறவின் மூலம் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் முக்கியமான கனிமங்கள் ஆகியவற்றில் இரு நாடுகளும் பயனடைய முடியும் என்றும் கூறினார்.
Marcos இன் இந்த வருகையினால், கனடாவின் நான்காண்டு கால Indo-Pacific strategy நல்ல பலன்களைத் தரத் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது என்று Asia Pacific Foundation உதவித் தலைவர் Vina Nadjibulla தனது பகுப்பாய்வில் குறிப்பிட்டுள்ளார்.
Carney வெளிநாட்டுத் தலைவர்களைச் சென்று சந்தித்துள்ளார் என்றாலும், அவர்கள் கனடாவிற்கு வருவது உண்மையான ஆர்வத்தைக் காட்டுகிறது என்று அவர் கூறுகிறார். குறிப்பாக வர்த்தகம், கடல்சார் கண்காணிப்பு மற்றும் எரிசக்தி ஆகியவற்றில் கனேடிய அரசாங்கத்துடன் Philippines இணைந்து செயற்படும் வேளையில் இது முக்கியத்துவம் பெறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடா தற்போது Philippines மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பரந்த கூட்டமைப்பு (ASEAN) ஆகிய இரண்டோடும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது, மேலும் November மாதம் Manila விற்கு மேற்கொள்ளவிருக்கும் தனது பயணத்திற்கு முன்னதாக அந்தப் பேச்சுவார்த்தைகளை Carney முடிக்க எதிர்பார்க்கின்றார்.
