அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு July 04 ஆந் திகதியாகிய இன்றைய தினம் Royal Canadian Air Force மற்றும் அமெரிக்க விமானப்படையும் இணைந்து Ottawa வான்பரப்பில் அணிவகுப்பு நடத்தவுள்ளன..
அமெரிக்கர்கள் தங்களது சுதந்திரப் பிரகடனம் கையெழுத்திடப்பட்டதன் 250-வது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகிறார்கள். Ottawa வில் உள்ள அமெரிக்க தூதுவர் Pete Hoekstra வின் உத்தியோகபூர்வ இல்லத்தில், வருடாந்த July 4 கொண்டாட்டத்திற்காகக் கூடியிருக்கும் மக்கள், இந்த ஜெட் விமானங்கள் குறைந்த உயரத்தில் பறப்பதைக் காண்பார்கள். இந்த சம்பிரதாயபூர்வ விமான அணிவகுப்பு கிழக்கு நேரப்படி மாலை 6:30 மணியளவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கனடாவின் இரண்டு CF-18 Hornets விமானங்களும், அவற்றுடன் இணைந்து அமெரிக்காவின் இரண்டு F-35 Lightning II ஜெட் விமானங்களும் பறக்கவுள்ளன.
இரு நாடுகளும் தங்களின் இருதரப்பு கண்ட பாதுகாப்பு அமைப்பான NORAD அமைப்பின் கீழ், வான்வெளியில் வழக்கமாக எவ்வாறு இணைந்து செயற்படுகின்றன என்பதை வெளிப்படுத்துவதற்காகவே இந்த அணிவகுப்பு நடத்தப்படுவதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
