அடுத்த உலகக் கிண்ண நாக்-அவுட் சுற்றில் கனடா ஆடவர் காற்பந்து அணி, Morocco வை எதிர்கொள்ள உள்ளதால், நாடு முழுவதிலும் உள்ள இரசிகர்கள் அவர்களை உற்சாகப்படுத்தக் காத்திருக்கிறார்கள்.
இது கனடாவுக்கு மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியாக அமையக்கூடும், இருப்பினும் அவர்கள் தங்களின் மிகக் கடினமான எதிரணியை இதில் எதிர்கொள்ள நேரிடும்.
FIFA தரவரிசையில் Morocco ஏழாவது இடத்திலும், கனடா 30-வது இடத்திலும் இந்தத் தொடருக்குள் நுழைந்தன. இப்போட்டி Texas இல் உள்ள Houston மைதானத்தில் நடைபெறுகிறது, இதில் ஏராளமான கனேடியர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் Los Angeles இல் South Africa விற்கு எதிராக 1-0 என்ற கணக்கில் பெற்ற வியத்தகு வெற்றியின் மூலம், ஆடவர் உலகக் கிண்ண நாக்-அவுட் சுற்றில் கனடா வரலாற்றிலேயே தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
மேலும், இந்தப் போட்டிக்கு முன்னதாக இரசிகர்கள் Houston உள்ள மைதானத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லவும் திட்டமிட்டுள்ளனர். உலகக் கிண்ண போட்டிகள் நடைபெறும் கனடாவின் இரண்டு மைதானங்களில் ஒன்றில் கூட இப்போட்டி நடத்தப்படாதது குறித்து சில இரசிகர்கள் தங்களது அதிருப்தியை இணையத்தில் தெரிவித்துள்ளனர்.
Toronto தனது இறுதி உலகக் கிண்ண போட்டியை கடந்த வியாழக்கிழமை நடத்தியது, அத்துடன், Vancouver தனது பங்களிப்பை அடுத்த செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு செய்ய உள்ளது. எனினும், இரு நகரங்களிலும் உள்ள இரசிகர்கள் FIFA Fan Festival இல் தொடர்ந்து கலந்துகொள்ளலாம், உலகக் கிண்ணம் முடியும் வரை அங்கு போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
