கனடா செய்திகள்

உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியது கனடா.

சனிக்கிழமை நடைபெற்ற 16வது சுற்று ஆட்டத்தில் Morocco விடம் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கனடா FIFA உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் கனடா ஆதிக்கம் செலுத்தியதுடன், முதல் பாதியில் நான்கு கோல் அடிக்கும் வாய்ப்புகளையும் உருவாக்கியது. ஆனால், Morocco அணியின் Montreal இல் பிறந்த கோல்கீப்பரான Yassine Bounou வை தாண்டி அவர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

இந்த முடிவு கனடா அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தத் தொடரில்தான் ஆடவர் உலகக் கிண்ண வரலாற்றில் கனடா அணி தனது முதல் புள்ளியையும், முதல் வெற்றியையும் பதிவு செய்ததுடன், முதல் முறையாக knockout சுற்றுக்கும் தகுதி பெற்றிருந்தது.

கனடா அணியின் நட்சத்திர வீரரும் அணித்தலைவருமான Alphonso Davies, தொடை நரம்புப் பாதிப்பு காரணமாக இந்த முக்கிய போட்டியில் விளையாடவில்லை. மருத்துவப் பரிசோதனையில் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், முழு உடற்தகுதியுடன் இல்லாததால் அவர் விளையாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டார்.


இந்த வெற்றியின் மூலம் Morocco அணி கால இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன்படி July 9 அன்று Boston இல் நடைபெறவுள்ள கால இறுதிப் போட்டியில், France அல்லது Paraguay ஆகிய அணிகளில் வெற்றிபெறும் அணியை Morocco எதிர்கொள்ளும்.

Related posts

அமெரிக்காவிடம் சரணடைந்ததா கனடா? வெள்ளை மாளிகை கூறுவது என்ன?

canadanews

கனேடிய,வேலையின்மை விகிதம் 5.8% ஆக உயர்வு;

Editor

Liberals இனால் கனேடிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எடுக்கப்பட்ட தேர்வை நீக்க Conservatives உறுதிமொழி

admin