கனடா செய்திகள்

கனடாவிற்காக போராடுவோம், Alberta பிரிவினைவாதம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கருத்து.

Calgary யில் வளர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre, Stampede திருவிழாவைக் கண்டுகளிப்பதற்காக இந்த வார இறுதியில் Calgary நகரத்திற்கு வருகிறார்.

சனிக்கிழமை இரவு Heritage பூங்காவில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், October 19 பொது வாக்கெடுப்பு மற்றும் Alberta பிரிவினைவாதம் குறித்தும் பேசினார்.

“நாங்கள் கனடாவிற்காகப் போராடுவோம்,” என்று Poilievre கூறினார். “அச்சுறுத்தல்கள் மூலமாகவோ அல்லது அவர்களை நோக்கிக் விரல் நீட்டி எச்சரிப்பதன் மூலமாகவோ அல்லது அவர்களுக்குப் பாடம் புகட்டுவதன் மூலமாகவோ அல்லாமல், வரவிருக்கும் பொது வாக்கெடுப்பில் Alberta மக்களின் ஆதரவை நம்பிக்கையின் மூலம் மீண்டும் வென்றெடுப்போம். இந்த விவாதத்தின் இரு தரப்பிலும் உள்ள மக்களுக்கு நாங்கள் மரியாதையளிக்க விரும்புகிறோம்.” என்றார்.

இதற்குப் பல்வேறு நியாயமான கண்ணோட்டங்கள் உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார். “ஒருங்கிணைந்த கனடாவிற்காக நான் எப்போதும் நிற்பேன் என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கும் அதே வேளையில், இந்த விவாதத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் கருத்துக்களைக் கேட்கவும் அவர்களின் நியாயமான கவலைகளுக்குத் தீர்வுகாணவும் நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் எனவும் எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கைச் செலவின நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வர Carney யின் அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் அது தொடர்ந்து திணறி வருவதாகவும் அவர் இதன்போது மத்திய அரசாங்கத்தை குற்றஞ் சாட்டினார்.

Related posts

நிச்சயமற்ற தன்மை மற்றும் விசா தாமதங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள் fall semester இனை தவறவிடுகின்றனர்

admin

அமெரிக்காவுடனான கனடாவின் உறவு குறித்து கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருப்பது தவறானது – Mark Carney.

canadanews

கனடாவின் பெரும்பகுதி இயல்பை விட வெப்பமான வீழ்ச்சியைக் கொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது: The Weather Network

admin