Royal Canadian விமானப்படைக்காக உருவாக்கப்பட்டு வரும் நான்கு புதிய உத்தியோகபூர்வ போக்குவரத்து மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்களில் முதலாவது விமானம், தனது தொடக்க சோதனைப் பறப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது கனடாவின் இராணுவ tanker விமானப் படையை நவீனமயமாக்கும் $3.6 பில்லியன் மதிப்பிலான முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
கனடா தனது பழமையான CC-150, Polaris விமானப் படைக்கு மாற்றாக, ஒன்பது CC-330 Husky tanker போக்குவரத்து விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளது. அவற்றுள், நான்கு புதிய விமானங்களும், ஐந்து பயன்படுத்தப்பட்ட விமானங்களும் அடங்கும்.
Spain இல் உள்ள Airbus Defence நிறுவனத்தில் இந்த புதிய Husky விமானம் பறக்கும் படங்களை முதன்முதலாக அந்த நிறுவனம் வியாழக்கிழமையன்று வெளியிட்டது. இந்த ஒன்பது விமானங்களும் June 2023-இல் வரி அறவீடுகளுக்கு முன்னர் 3.6 பில்லியன் டாெலர் மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தின் மூலம் Airbus நிறுவனத்திடமிருந்து கொள்முதல் கொள்முதல் செய்யப்பட்டது.
புதிதாக வடிவமைக்கப்பட்ட Airbus A330 விமானத்தை உலகின் அதிநவீன பல்துறை எரிபொருள் நிரப்பும் விமானம் என்று அந்த செய்திக்குறிப்பு விவரித்துள்ளதுடன், “இது கனடாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும், வெளிநாடுகளில் அதன் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும் நாட்டின் தேவைகளை நிறைவாக பூர்த்தி செய்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளது.
