கனடா செய்திகள்

Toronto வில் அதிகரித்த வெப்பநிலையால் கிட்டத்தட்ட 40 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் நகரை வாட்டி வதைத்த கடுமையான வெப்ப அலையின் போது, வெப்பம் தொடர்பான பாதிப்புகளால் அவசர சிகிச்சை பிரிவிற்கு கிட்டத்தட்ட 40 பேர் வந்துள்ளதாக Toronto Public Health தெரிவித்துள்ளது.

Environment Canada வின் Orange அளவிலான வெப்ப எச்சரிக்கை அமுலில் இருந்த June 30 முதல் July 4 வரை, Toronto மருத்துவமனைகளில் வெப்பம் தொடர்பான பாதிப்புகளுக்காக மொத்தம் 39 பேர் அவசர சிகிச்சை பிரிவிற்கு வந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

July 2 அன்று வெப்ப அலையின் தாக்கம் உச்சத்தில் இருந்தபோது, ஒரே நாளில் அதிகபட்சமாக 15 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்த வெப்ப அலையின் போது பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36°C ஆகும்.

தீவிர வெப்பத்தால் ஏற்படும் இதய நோய் மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்ற அனைத்து விதமான உடல்நலப் பாதிப்புகளையும் இந்த அவசர சிகிச்சை பிரிவு தரவுகள் முழுமையாகக் காட்டுவதில்லை என்று Toronto Public Health தெரிவித்துள்ளது

மேலும், இந்த ஆண்டு வெப்பத்தைத் தணிக்கும் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டிருந்தும், Canada Day விடுமுறை காரணமாக நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருந்ததும் இந்த எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் Environment Canada வின் Orange எச்சரிக்கையின் கீழ் இருந்தன. கடுமையான பாதிப்பையோ அல்லது உடல்நலப் பாதிப்புகளையோ ஏற்படுத்தக்கூடிய தீவிர வானிலையைக் குறிக்கும் இந்த எச்சரிக்கை, மிக அரிதாகவே விடுக்கப்படக்கூடிய ஒன்றாகும்.

Related posts

பாரிஸில் நடந்த கனடாவின் ஒலிம்பிக் கோடைகால விளையாட்டுப் போட்டிகளில் ஏற்றத்தாழ்வுகளுடன் இருந்தன

admin

Poilievre போட்டியிடும் இடைத் தேர்தலில் வேட்பாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

canadanews

கனடாவின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

canadanews