கனடா செய்திகள்

சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் கனடாவுடனான உறவைச் சீரமைக்குமாறு அமெரிக்க செனட்டர் வேண்டுகோள்.

அமெரிக்க அதிபர் Donald Trump கனடா மீது புதிய வர்த்தக அச்சுறுத்தல்களை விடுத்ததைத் தொடர்ந்து, புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில் அமெரிக்க செனட்டர்கள் பலர் வர்த்தகப் பிரதிநிதி Jamieson Greer இடம் வரிகள் தொடர்பாகக் கடுமையான கேள்விகளை எழுப்பினர்.

அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் நோக்கில் கனடா மாகாண முதல்வர்கள் Charlottetown இல் கூடியுள்ள நிலையில், இந்த அச்சுறுத்தல்கள் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்காவின் மதுபானங்களை விற்பனை செய்ய பல்வேறு கனேடிய மாகாணங்கள் தடை விதித்ததற்குப் பதிலடியாக, கனடாவின் பல வகையான பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிக்க அதிபர் திட்டமிட்டுள்ளார். இந்தத் தடையே, Trump பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு விடுக்கப்பட்ட ஒரு பதிலடிதான். மேலும், கனடா தனது உள்நாட்டு பால் உற்பத்தித் துறைக்கு வழங்கி வரும் பாதுகாப்பையும் அதிபர் ஒரு காரணமாகக் குறிப்பிட்டுள்ளார்.

கனேடியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட ஏனைய வரிகளைப் போலல்லாமல், இந்த வரிகளுக்குக் CUSMA வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் எவ்வித விலக்கும் அளிக்கப்படவில்லை. இந்த புதிய வரிகள் August 19 முதல் அமுலுக்கு வரவுள்ளன. தனது மாநிலத்திற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 40 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிவித்த ஜனநாயகக் கட்சியின் Vermont மாநில செனட்டர் Peter Welch, கனடாவுடனான உறவைச் சீரமைக்குமாறு Greer இடம் வேண்டுகோள் விடுத்தார்.

Related posts

February முதல் 15000 இற்கும் மேற்ப்பட்ட திருடப்பட்ட கனேடிய வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள – Interpol அறிவிப்பு

admin

எரிபொருள் விலை ஏற்றத்தால் உச்சம் தொடும் கனடாவின் பணவீக்கம்.

canadanews

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு வருகின்றதா? Alberta உடனான குழாய்வழி ஒப்பந்தம்.

canadanews