கனடா செய்திகள்

Ford இன் Billy Bishop விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை மத்திய அரசாங்கம் நிராகரித்தது.

கனேடிய மத்திய அரசாங்கம் Toronto, Billy Bishop விமான நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை நிராகரித்துள்ளது. Onratrio முதலமைச்சர் Doug Ford முன்மொழிந்த விரிவாக்கத் திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லப்போவதில்லை என்று போக்குவரத்து அமைச்சர் Steven MacKinnon தெரிவித்துள்ளார்.

இப்பகுதியின் இணைப்புத் தேவைகளை ஆராய்வதிலும், உள்ளூர்வாசிகளின் நலன்களைப் பாதுகாப்பதிலும் நாங்கள் எப்போதும் இணைந்து செயற்படுவோம்,” என்று MacKinnon கூறினார்.

“இருப்பினும், Little Norway Park அல்லது Hanlan’s Point Beach போன்ற மதிப்புமிக்க பொது இடங்களை ஆக்கிரமிக்கும், அதிக சத்தத்தை உண்டாக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் அல்லது Toronto வில் மிகவும் தேவையான வீடுகளைக் கட்டுவதற்கான ஆற்றலை தடுக்கும் எந்தவொரு திட்டங்களையும் நாங்கள் தொடர மாட்டோம்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Toronto மாநகர முதல்வர் Olivia Chow இந்த நடவடிக்கையை “நிலப் பறிப்பு” என்று வர்ணித்ததுடன், “ஜனநாயக விரோத செயல்” என்றும் அழைத்துடன், Toronto மக்களின் குரலுக்குச் செவிசாய்த்ததற்காக பிரதமர் Carney மற்றும் MacKinnon ஆகியோருக்கு Chow நன்றி தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்தத் திட்டத்தை எதிர்த்த சுற்றுச்சூழல் அமைப்புகள், விமான நிலைய விரிவாக்கத்தினால், அதிக சத்தம், காற்று மாசுபாடு, கழிவுநீர் பிரச்சனை போன்ற சூழல் பிரச்சினைகள் ஏற்படுவதுடன், தீவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் அப்பகுதியிலுள்ள வனவிலங்குகள் மீது ஏற்படுத்தும் நீடித்த தாக்கங்கள் குறித்தும் கவலைகளை எழுப்பின.

“புதிய பூங்காக்கள், வீடுகள் மற்றும் பல வசதிகளுடன் எதிர்கால சந்ததியினருக்கான ஒரு சிறந்த கடற்கரைப் பகுதியை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்,” என்றும் Toronto மாநகர முதல்வர் Olivia Chow தனது ‘X’ தள பதிவில் எழுதியுள்ளார்.

Related posts

புதிய லிபரல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட Mark Carney

canadanews

பொதுத்துறை பணியாளர்களின் வேலைநிறுத்தம் நான்காவது வாரத்தை எட்டியதால் பாதிக்கப்படும் Ontario குடும்பங்கள்.

canadanews

பட்டிணியால் வாடும் பாலஸ்தீனியர்களுக்கு உதவும் கனடாவிற்கு தடையாக அமையுமா Israel?

canadanews