அமெரிக்காவின் அண்மைய வர்த்தக வரி முன்மொழிவுகளுக்குப் பின்னர், கனடாவின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் Ottawa City Hall இல் இன்றுமுதல் முதல் ஒரு மிகப்பெரிய கனடாவின் தேசியக்கொடி பறக்கவிடப்படும்.
“கடந்த 18 மாதங்களில், கனேடியர்களின் பெருமிதம் அசாதாரணமாக அதிகரித்திருப்பதை நாம் கண்டிருக்கிறோம்,” என்று Ottawa மாநகர முதல்வர் Mark Sutcliffe தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் Ottawa விலும் கனடா முழுவதிலும் உள்ள பல வணிகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான புதிய வரிகளைக் கருத்தில் கொண்டு, நமது நகரமும் நமது நாடும் பலமாகவும் ஒற்றுமையாகவும் இருக்கின்றன என்பதைக் காட்ட வேண்டியது எப்போதையும் விட இப்போது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.” அந்தப் பிரம்மாண்டமான கொடி வழக்கமாக கனடா தினத்தன்று மட்டுமே City Hall இல் ஏற்றப்படும்.
“நமது maple இலைக் கொடியைத் தொடர்ந்து பெருமையுடன் ஏற்றி வைப்போம், மேலும் வலிமையான, மீள்தன்மை கொண்ட, தற்சார்புடைய ஒரு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றாகச் செயற்படுவோம்” என்று Sutcliffe கூறினார்.
கனடாவின் பாகுபாடான வர்த்தகக் கொள்கைகளைக் காரணங்காட்டி, wine, hockey sticks மற்றும் சிமெண்ட் உள்ளிட்ட சில கனேடியப் பொருட்கள் மீது புதிய 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் Donald Trump கடந்த வாரம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
