கனடா செய்திகள்

Billy Bishop விமான நிலைய விரிவாக்கம் உண்மையிலேயே கைவிடப்பட்டுவிட்டதா?

Doug Ford இன் Toronto Billy Bishop நகர விமான நிலைய விரிவாக்க முன்மொழிவை மத்திய அரசாங்கம் நிறுத்தி வைத்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகின்றன. ஆனால், பிரதமர் Mark Carney யின் அண்மைய கருத்துக்கள் இப்பிரச்சினை குறித்து மீண்டும் விவாதங்களைத் தூண்டியுள்ளதுடன் குழப்பமான சூழலையும் உருவாக்கியுள்ளன.

மத்திய அரசாங்கம் தலையிட்டு விமான நிலைய விரிவாக்கத்தை நிறுத்தியபோது. மாகாணத்தின் திட்டத்தை எதிர்த்த மக்கள் தங்களது போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டதாகவே கருதினர். ஆனால், பிரதமரின் அண்மைய கருத்துக்கள் காரணமாக இப்போது அவர்களால் அதுபற்றி நிச்சயமாக உறுதியுடன் இருக்க முடியவில்லை.

“பிரதமர் Carney இந்த வாக்குறுதியை என்றென்றும் காப்பாற்றுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” Toronto மாநகர முதல்வர் Olivia Chow உம் அதையே எதிர்பார்க்கிறார் போலத் தெரிகிறது, என்று NoJetsToronto அமைப்பின் தலைவரான Norm Di Pasquale தெரிவித்துள்ளார்.

இதனிடையே செய்தி நிறுவனமொன்றிற்கு வழங்கப்பட்ட அறிக்கையொன்றில், “தீவு விமான நிலைய விரிவாக்கம் முன்னெடுத்துச் செல்லப்படாது என்பதே எங்கள் புரிதல். மேலும், விமான நிலைய விரிவாக்கத்திற்கான எந்தவொரு அதிகாரப்பூர்வ முன்மொழிவையும் முதல்வர் இதுவரை பார்த்ததில்லை,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​இந்தப் பிரச்சினை மீண்டும் தீவிரமடைந்து முன்னிலை பெற்றால் மக்கள் “ஒருவித ஆத்திரமடைவார்கள்” என்று Di Pasquale மேலும் கூறினார்.

எனினும், Ontario வின் போக்குவரத்து அமைச்சர் Prabmeet Singh Sarkaria கூறுகையில், இந்தப் பணிகள் தொடரும் நிலையில், Toronto தீவுகள் உள்ளிட்ட பொது இடங்களைப் பாதுகாப்பதையும், சாத்தியமான சத்தம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களை எதிர்கொள்வதையும் உறுதிசெய்யும் ஒரு திட்டத்தை நாங்கள் காண ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,” என்றார்.

Related posts

வரி ஒத்திவைப்பு ஊக்கமளித்தாலும் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது என கனேடிய உற்பத்தியாளர்கள் தெரிவிப்பு

canadanews

தடுப்பூசி வளர்ச்சியை விரைவுபடுத்த Liberals ஒரு தொற்றுநோய் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குகின்றனர்

admin

Newfoundland மற்றும் Labrador மாகாண சபைத்தேர்தலில் பெரும்பான்மையை வென்றது Conservative கட்சி.

canadanews