கனடா செய்திகள்

ஏமாற்றி புதிய தொலைபேசிகளை கொள்வனவு செய்யத்தூண்டும் மோசடி பற்றி Toronto பொலிஸார் எச்சரிக்கின்றனர்.

மோசடி செய்பவர்களுக்குத் தெரியாமலேயே புதிய விலையுயர்ந்த தொலைபேசிகள், smartwatches மற்றும் tablets வாங்கி ஏமாற்றமடைந்த நபர்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக Toronto பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

October 2021 முதல் July 2026 வரை, அங்கீகரிக்கப்பட்ட தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறித் தொடர்பு கொண்ட நபர்களால் ஏமாற்றப்பட்டதாகப் பல பாதிக்கப்பட்டவர்கள் ஒரே மாதிரியான தகவல்களுடன் முறைப்பாடுகளைப் பதிவுசெய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். தொடர்பு கொள்பவர்கள் நபரின் உண்மையான கணக்கு மற்றும் கட்டண விபரங்களைக் கைவசம் வைத்துள்ளதால், அது உண்மையானது என நம்ப வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

“அழைப்பாளர் மிகவும் தள்ளுபடி செய்யப்பட்ட அல்லது இலவச தொலைபேசி, smartwatches அல்லது tablets வழங்கி, இந்தச் சலுகை உண்மையுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகக் கூறுகிறார்” என்று பொலிஸாரின் செய்திக்குறிப்பு விளக்கியுள்ளது.

தொடர்பு கொள்பவர்கள், பாதிக்கப்பட்டவரை அதிகாரப்பூர்வ தொலைபேசி சேவை வழங்கி வலைத்தளம் அல்லது செயலியில் உண்மையாக கொள்வனவு வைக்கிறார். எனினும், அந்தப் பொருள் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு வந்தடைந்த பின்னரே உண்மையான மோசடி வெளிப்படுகிறது.

அப்போதுதான், தவறு நடந்துவிட்டதாகக் கூறி, உதாரணமாக, தவறான model அனுப்பப்பட்டுவிட்டது, என்று அந்தப் போலியான ஊழியர் மீண்டும் பாதிக்கப்பட்டவரைத் தொடர்பு கொள்வதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சரியான பொருள் அவர்களுக்குத் தபாலில் அனுப்பப்படும் என்றும், அதற்கு முன்பாகத் தங்களுக்குக் கிடைத்த பொருளைத் திரும்ப அனுப்புமாறு பாதிக்கப்பட்டவரிடம் கேட்டுக்கொண்டு, மோசடி செய்பவர் முன்செலுத்தப்பட்ட தபால் லேபிளை (pre-paid shipping label) மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் அவர்களுக்கு அனுப்பி வைக்கிறார்.

“shipping label இல் உள்ள முகவரி வழக்கமாக முறைப்படுத்தப்பட்டதாகவோ அல்லது மோசடி செய்பவருடன் தொடர்பில்லாத மூன்றாம் தரப்பினரின் முகவரியாகவோ இருக்கும்” என்று அந்தச் செய்திக்குறிப்பு மேலும் குறிப்பிடுகிறது. “அனுப்பப்பட்ட பொருள் அந்த முகவரிக்கு விநியோகிக்கப்படும், பின்னர் வீட்டு உரிமையாளருக்குத் தெரியாமலோ அல்லது அனுமதியின்றியோ மோசடி செய்பவரால் அங்கிருந்து அது பெறப்படுகிறது.

பல நிகழ்வுகளில், அந்தப் பொதி தங்கள் முகவரிக்கு விநியோகிக்கப்பட்டது கூட வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருப்பதில்லை.” மோசடி செய்பவர், அப்பொருளைப் பெற்றுக்கொள்ள ஒரு உண்மையான courier நிறுவனத்தைக் கூட அனுப்பக்கூடும் என்றும் பொலிஸார் தெரிவிக்கிறனர்.

சுருக்கமாகச் சொன்னால், பாதிக்கப்பட்டவர்கள் மோசடி செய்பவர்களுக்குப் புதிய பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளனர். “பாதிக்கப்பட்டவர்கள், வலைத்தளம் அல்லது செயலி வழியாகத் தாம் முறையாக கொள்வனவு செய்த தொலைபேசி மற்றும் தொலைபேசிக்குரிய நிதியிழப்பிற்குத் தாமே முழுமையான பொறுப்பினையும் ஏற்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறனர்,” என்று பொலிஸார் விளக்கியுள்ளனர்.

Related posts

இந்த இலையுதிர்காலத்தில் Ontario corner stores களில் Beer, wine மற்றும் தயாரான cocktails விற்கப்படும்

admin

Quebec இல் பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் தடுத்து நிறுத்தப்பட்டனர், நேர்ந்தது என்ன?

canadanews

அமெரிக்காவின் வரிவிதிப்புக்கள் மிகப்பெரிய பலனைத் தருகின்றன.

canadanews