கனடா செய்திகள்

Toronto வில் வீடு வாங்குபவர்களுக்குச் சாதகமான சந்தை நிலவரம்.

Toronto வில் ஏறத்தாழ அனைத்து வீடுகளுக்கும் இடையே நடைபெற்ற கடுமையான ஏலப் போட்டி காலங்கள் முடிவடைந்து நீண்ட நாட்களாகிவிட்டன. அதேநேரம், வாங்குபவர்களின் கைகளே முற்றிலும் ஓங்கியிருந்த சகாப்தமும் கூட முடிவுக்கு வரக்கூடும் என்பதை ஒரு புதிய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதன்படி, Greater Toronto பகுதி வீட்டுச் சந்தை இறுதியாக ஒரு சீரான நிலைமையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த வாரத் தொடக்கத்தில், Toronto Regional Real Estate Board (TRREB) இன் புதிய தரவுகளின் படி குறைந்த எண்ணிக்கையிலான வீட்டு உரிமையாளர்களே தங்களது வீடுகளை விற்பனைக்காகப் பட்டியலிடுவதால், சந்தை இறுக்கமடையத் தொடங்கியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் விற்பனையாளர்களுக்கு அதிக சாதகமாக இருந்த சந்தையைத் தொடர்ந்து, வாங்குபவர்களுக்கு சாதகமாக மாறிய நிலையில், தற்போது அதில் ஒரு கவனிக்கத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் நெகிழ்வான தொலைதூர வேலை வாய்ப்புகளால் உந்தப்பட்ட சந்தை எழுச்சியின் உச்சம் காரணமாக February 2022-இல் Toronto வில் அனைத்து வகையான வீடுகளின் சராசரி விலை $1,334,544 வரை உயர்ந்தது. ஆனால், சந்தை ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு மாற்றமடைந்ததன் விளைவாக, அந்த உச்சநிலையிலிருந்து சராசரி விலைகள் தற்போது 25 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளன.

TRREB தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் Toronto வில் 62,433 வீடுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இது 2000-ஆம் ஆண்டிற்குப் பின்னர் பதிவாகிய மிகக் குறைந்த தொகையாகும்.

“இத்தகைய சூழல் நிலவி நீண்ட காலம் ஆகின்றது, தற்போதைய சந்தைச் சுழற்சியின் மிகக் குறைந்த நிலையை நாம் எட்டியுள்ளோம் என்பதற்கு இது ஒரு அறிகுறியாக இருக்கலாம் என்று நான் கருதுகிறேன்,” என TRREB-இன் பிரதம தகவல் அதிகாரி Jason Mercer தெரிவித்துள்ளார்.

Related posts

நாடுகடந்த திருட்டுக் குழுக்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் Ottawa பொலிஸார்.

canadanews

அவரைத் தவறவிட மாட்டோம் என்று Freeland அமைச்சரவையில் இருந்து நீங்கியமை குறித்து Trump தெரிவிப்பு

admin

Ottawa உத்தியோகபூர்வ அந்தஸ்து இல்லாத புதியவர்களுக்கான பாதையை உருவாக்குகிறது

admin