அமெரிக்காவுடனான கனடாவின் தலைமை வர்த்தகப் பேச்சாளரான Janice Charette, August 19 அன்று வெள்ளை மாளிகை புதிய 50 சதவீத சுங்கவரியை விதித்தால், அது மேற்கொண்டு நடைபெறும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் எனத் தனது அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தகவலறிந்த தொழில்துறை வட்டாரங்கள் கூறுகையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி Jamieson Greer இற்கு எந்தவொரு இறுதி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும், ஆனால் அவர் சூழ்நிலையின் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளன.
Charette இந்தக் கருத்துக்கள் முதன்முதலில் புதன்கிழமையன்று ‘The Globe and Mail’ நாளிதழால் செய்தியாக வெளியிடப்பட்டன.
ஒரு தொழில்துறை வட்டாரத்தின்படி, இரும்பு மற்றும் அலுமினியம் போன்ற பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு விரிவான மற்றும் அர்த்தமுள்ள சுங்கவரி நிவாரணம் வழங்கப்படாவிட்டால், அமெரிக்க மதுபானங்களை மீண்டும் கடைகளின் அலுமாரிகளுக்குக் கொண்டுவர மாகாணங்களை மத்திய அரசாங்கத்தால் வற்புறுத்த முடியாது என்பது Greer க்கு தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க மதுபானங்கள் மீது மாகாணங்கள் விதித்துள்ள தடைகள், Trump இன் அதிருப்திக்குரிய முதன்மைக் காரணங்களுள் ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Alberta மற்றும் Saskatchewan ஆகியவற்றைத் தவிர்த்து, 10 மாகாணங்களில் எட்டு மாகாணங்கள் கடந்த ஆண்டிலிருந்து அமெரிக்க மதுபானங்களைக் கடைகளின் இருந்து அகற்றியுள்ளன.
அடுத்த வாரம் வரவிருக்கும் காலக்கெடுவுக்கு முன்னதாக, கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc மற்றும் Charette ஆகியோர் Washington இல் உள்ளனர். அவர்கள் தொடர்ச்சியாக மூன்றாவது வாரமாகச் செவ்வாயன்று Greer ஐ சந்தித்துப் பேசினர்.
கடந்த வாரம், கனடா மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கிடையே விவாதிக்கப்பட்டு வரும் முன்மொழிவுகளில், வாகனங்கள் மீதான சுங்கவரிகளையும், மதுபானங்கள் மீதான மாகாணத் தடைகளையும் நீக்குவது ஆகியவை அடங்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பால் பொருட்களுக்கான பங்கீட்டு அளவுகளை முகாமைத்துவம் செய்யும் முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவது குறித்தும் முன்மொழிவுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவற்றுக்குப் பதிலாக, கனடா ‘Section 232’ இற்கமைய சுங்கவரிகளில் இருந்து விலக்கு அல்லது நிவாரணத்தை எதிர்பார்க்கின்றது. அந்தப் பிரிவின் கீழ், அமெரிக்கா இரும்பு, அலுமினியம் மற்றும் செப்புத் தயாரிப்புகளுக்கு 15 முதல் 50 சதவீதம் வரையிலும், வாகனங்கள் மற்றும் truck களுக்கு 25 சதவீதமும், மென்மரங்கள் மீது 10 சதவீதமும் சுங்கவரிகளை விதித்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.
