கனடா செய்திகள்

வளர்ச்சிப் பாதையில் கனடாவின் பொருளாதாரம். Statistics Canada சொல்வது என்ன?

வெள்ளிக்கிழமையன்று Statistics Canada வெளியிட்ட புதிய தரவுகளின் படி காலாண்டில் பொருளாதாரம் ஆரோக்கியமான வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளதை சுட்டிக்காட்டுகின்றன. இதனடிப்படையில், இவ் ஆண்டின் ஆரம்பத்தில் பொருளாதார மந்தநிலை குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் அளவுக்கதிகமாக பெரிதுபடுத்தப்பட்டிருக்கலாம் என்பது புலப்படுகின்றது.

இரண்டாம் காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.3 சதவீதம் உயர்ந்துள்ளது, இது பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்பை விட சற்று குறைவாகும். இருப்பினும், இது 2023 இன் தொடக்கத்திற்குப் பின்னர் பதிவான மிக வேகமான காலாண்டு வளர்ச்சி விகிதமாகும்.

இரண்டாம் காலாண்டில் ஏற்றுமதி 3.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு கார்கள் மற்றும் சிறியரக வாகனங்களின் ஏற்றுமதியில் ஏற்பட்ட மீட்சியே முக்கிய காரணமாகும். கடந்த இரண்டு காலாண்டுகளில் வாகன உற்பத்தி குறைந்திருந்ததாக StatCan தெரிவித்துள்ளது.

வசந்த காலத்தில் குறிப்பாக Ontario, Quebec மற்றும் British Columbia ஆகிய மாகாணங்களில் மீள்விற்பனை வீட்டுச் சந்தை சூடுபிடித்ததாகக் கூறிய StatCan, குடியிருப்புச் சார்ந்த முதலீடுகளும் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்ததாகத் தெரிவித்துள்ளது.

​அதேவேளையில், இரண்டாம் காலாண்டில் வணிக மூலதன முதலீடு 2.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக StatCan தெரிவித்துள்ளது. இது தொடர்ந்து ஐந்து காலாண்டுகளாகக் காணப்பட்ட சரிவை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

June மாதத்தில் பலதரப்பட்ட தொழில்துறைகளின் விரிவான வளர்ச்சியால், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக StatCan தெரிவித்துள்ளதுடன், June மாதத்தில் கனடா பத்து FIFA உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்தியதன் மூலம், சில சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகள் ஊக்கம் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளது.

​சுங்கவரி மாற்றங்களால் பாதிக்கப்படக்கூடிய உற்பத்தித் துறை, June மாதத்தில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக வளர்ச்சியடைந்துள்ளது என்று StatCan சுட்டிக்காட்டியுள்ளது.

September 2 ஆம் திகதி வரவிருக்கும் Bank of Canada வின் அடுத்த வட்டி விகித அறிவிப்பிற்கு முன்னதாக வெளியாகும் கடைசி முக்கியத் தரவு அறிக்கையாக இந்த இரண்டாம் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி அறிக்கை அமைந்துள்ளது.

Related posts

எந்தவித ஒப்பந்த உடன்பாடுகளும் இன்றி முடிவடைந்த Trump உடனான பேச்சுவார்த்தை.

canadanews

கனடா Tin காய்கறிகளுக்கு 10% வரியை விதித்துள்ளது, இதில் அமெரிக்கா உட்பட சில நாடுகளுக்கு விதிவிலக்களிக்கப்பட்டுள்ளது.

canadanews

சிறுபான்மை Liberal அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவுத்திட்டம் இன்று வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது.

canadanews