கனடா செய்திகள்

Conservative கட்சியின் தலைவர் போட்டியிடும் தொகுதியில் British Columbia மாகாண முதல்வர் இடைத்தேர்தல் அறிவிப்பு.

British Columbia மாகாண முதல்வர் David Eby அடுத்த மாதம் Abbotsford-Mission தொகுதியில் மாகாண இடைத்தேர்தலை September 26 இல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அங்கு சிக்கலில் உள்ள Conservative கட்சியின் தலைவர் Kerry-Lynne Findlay போட்டியிட உள்ளார்.

2024 மாகாண தேர்தலில் 3,000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் Pam Alexis, September 26 அன்று நடைபெறும் தேர்தலில் மீண்டும் வேட்பாளராகப் போட்டியிடுவார் என Eby யின் NDP கட்சி சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த மாதம் மாகாண சபையிலிருந்து வெளியேறிய Conservative கட்சி மாகாணசபை உறுப்பினர்களில் ஒருவரான Peter Milobar, தான் உருவாக்க விரும்பும் புதிய கட்சி இந்தத் தேர்தலில் ஒரு வேட்பாளரை களமிறக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

​May மாதம் Findlay கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரது பதவிக் காலம் சுமூகமாக அமையவில்லை. இந்த ஒரே மாதத்தில் ஆறு மாகாணசபை உறுப்பினர்கள் அவரது கட்சியிலிருந்து வெளியேறி சுயேச்சையாகச் செயற்படத் தொடங்கியுள்ளனர். இதில் ஐந்து பேர் ஒரே வாரத்தில் வெளியேறியவர்கள் ஆவர்.

கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் அவரது தலைமையையும், அவர் கட்சியை நடத்திச் செல்லும் விதத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். மேலும் ஒருவர் அவர் தேர்தலில் வெற்றி பெறத் தகுதியற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

September 5-ஆம் திகதி பிற்பகல் 1 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் என்று Elections BC வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டிய வாக்குப்பதிவு (Advance voting) September 18 முதல் 23 வரை நடைபெறும்.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள Abbotsford-Mission தொகுதியில் Alexis என்பவர் 2020-ஆம் ஆண்டில் மாகாணசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதற்கு முன்னர் அவர் Mission நகர முதல்வராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தத்கது.

Related posts

பொருளாதார மாற்றங்களை கனடா துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும். Bank of Canada ஆளுநர் வலியுறுத்தல்.

canadanews

Toronto வாகன திருட்டு காப்பீடு கோரிக்கைகள் 2018 முதல் 561 சதவீதம் அதிகரிப்பு – Ontario இல் $1B இற்கும் அதிகமான உரிமைகோரல்

admin

வீட்டு வசதி, வரி போன்றவற்றிற்கு Federal கணக்கெடுப்பில் முன்னுரிமை – $39.8B நிதி பற்றாக்குறை

admin