Quebec இன் கிராமப்புறப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தொகுதியில் கடும் போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல் உட்பட, மூன்று மத்தியரசாங்க தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஆரம்பிக்கிறது.
Conservative கட்சியின் Richard Martel, செனட் சபையில் அங்கம் வகிப்பதற்காக Chicoutimi-Le Fjord தொகுதியில் உள்ள தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.
2025-ஆம் ஆண்டில் நடைபெற்ற மும்முனைப் போட்டியில், Liberal மற்றும் Bloc Québécois வேட்பாளர்களை விட சுமார் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் Martel வெற்றி பெற்றிருந்தார்.
McGill University அரசறிவியல் பேராசிரியரான Daniel Béland கூறுகையில், Conservative கட்சியினரால் அந்தத் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாவிட்டால், Pierre Poilievre இன் தலைமைத்துவத்தின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி மேலும் வலுப்பெறும் என்று கூறுகிறார்.
Toronto வின் Beaches-East York மற்றும் North Vancouver-Capilano ஆகிய தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முன்னாள் அமைச்சர்களான Nate Erskine-Smith மற்றும் Jonathan Wilkinson ஆகியோர் வகித்த இடங்களை நிரப்பவே இந்தத் தேர்தல்கள் நடைபெறுகின்றன.
