கனடா செய்திகள்

நடைபெற்ற மூன்று மத்தியரசாங்க இடைத்தேர்தல்களிலும் Liberal கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.

திங்கட்கிழமை நடைபெற்ற மூன்று மத்தியரசாங்க இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்று, Liberal கட்சி தங்களின் இரண்டு இடங்களைத் தக்கவைத்துக்கொண்டதுடன் புதிதாக மூன்றாவதாக ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளது.

பிரதமர் Mark Carney யின் குறைந்த பெரும்பான்மை அரசாங்கம் சார்பில் Chicoutimi-Le Fjord தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் Daniel Gobeil அடுத்த நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகவுள்ளார்.

2018 முதல் அப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த Conservative கட்சியின் Richard Martel, செனட் சபைக்கு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தனது பதவியிலிருந்து விலகினார்.

Toronto வின் Beaches-East York தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் Liberal கட்சியின் Tanveer Shahnawaz வெற்றி பெற்றுள்ளார். Beaches-East York தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான Nate Erskine-Smith தொடக்கத்தில் மாகாணத் தலைமைக்கு போட்டியிட விரும்புவதாகக் கூறியிருந்தார். ஆனால், தற்போது அதற்கு மாறாக Ontario முழுவதும் October 26 அன்று நடைபெறவுள்ள நகர சபைத் தேர்தலில், Toronto மாநகர சபை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

North Vancouver-Capilano தொகுதியில், Trudeau தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இருந்த Jonathan Wilkinson ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கனடாவின் தூதுவராகப் புதிய நியமனத்தை ஏற்றுக்கொள்ளவுள்ள நிலையில், இற்குப்பதிலாக, நீண்டகால Liberal கட்சி அரசியல் பணியாளரான Braeden Caley ஐ வாக்காளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் தங்களின் பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்ள Liberal கட்சிக்கு இந்த மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற வேண்டிய தேவை இருந்தது. தற்போது கட்சி நிலவரப்படி Liberal கள் நாடாளுமன்றத்தில் 170 ஆசனங்களைக் கொண்டுள்ளனர்.

Related posts

சீனாவின் வரிகளை மறுசீரமைப்பது தொடர்பில் பேச சீனா பயணமாகிறார் பிரதமரின் பிரதிநிதி.

canadanews

Sweden அரச குடும்பத்தின் கனேடிய வருகையின் போது ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன

canadanews

Cantaloupe salmonella பாதிப்பில் கனடாவில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்தது.

Editor