British Columbia, Conservative கட்சியின் தலைவராக Kerry-Lynne Findlay பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, அந்த மாகாணசபை உறுப்பினர்கள் மிக வேகமாக கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அரசியல் விஞ்ஞானி Hamish Telford இக்கட்சியை “நம் கண்களுக்கு முன்னாலேயே சுக்குநூறாக உடைந்து நொறுங்குகிறது” என்று விவரித்துள்ளார்.
திங்களன்று அறிவிக்கப்பட்ட அண்மைய விலகலையும் சேர்த்து, August தொடக்கத்தில் இருந்து ஏழு Conservatives மாகாணசபை உறுப்பினர்கள் கட்சியின் அவைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளனர். “கனேடிய அரசியலில் இதற்கு முன்னர் இதுபோன்று எதையும் நான் பார்த்ததே இல்லை,” என்று அவர் கூறுகின்றார்.
தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் May 30 அன்று பேசிய Findlay, “நான் British Columbia வின் எதிர்காலத்திற்காகவும், நமது வாழ்க்கை முறைக்காகவும் மட்டுமே போராடுகிறேன்” என்று கூறினார்.
இதனிடையே, தற்போது மாகாணத்தில் ஆட்சியில் உள்ள NDP கட்சி தனது முதன்மை எதிர்க்கட்சி பலவீனப்படுவதைக் கவனித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை பேசிய மாகாண முதல்வர் David Eby, “Conservative கட்சி கடுமையான குழப்பத்தில் உள்ளது என்பதை நான் புரிகிறேன், எங்கள் கவனம் முழுவதும் British Columbia மக்களுக்குச் சேவையாற்றுவதிலேயே உள்ளது.” எனக் கூறினார்.
Conservative கட்சியின் நிலைத்திருப்பு கிராமப்புற British Columbia வில் அவர்களுக்கு கிடைக்கும் ஆதரவைப் பொறுத்தே அமையும் என்று Telford கூறுகிறார். “Kerry-Lynne Findlay மற்றும் Conservative கட்சிக்கு மிகவும் முக்கியமானது என்னவென்றால், உட்புறப் பகுதிகள் மற்றும் வடக்குப் பிராந்தியத்தில் அவர்களுக்கு ஒரு வலுவான பிராந்திய அடித்தளம் இருக்க வேண்டும் என்பதே,” என்று அவர் கூறினார்.
இவற்றுக்கு மத்தியில், Findlay தனது தலைமைத்துவத்திற்கான மிக முக்கியமான, வெற்றி அல்லது தோல்வியை தீர்மானிக்கும் ஒரு சோதனையையும் எதிர்கொள்கிறார். அதாவது, September 26 அன்று நடைபெறவுள்ள Abbotsford-Mission தொகுதியின் தேர்தலில் வெற்றி பெறுவதில் அவர் தனது முழு ஆற்றலையும் கவனத்தையும் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.
”அந்தத் தொகுதியில் அவர் வெற்றி பெற்றால், அவர் இன்னும் சில காலம் தலைவராகத் தொடர்வார் என்று நினைக்கிறேன்,” என்று Telford கூறினார். “ஒருவேளை அவர் வெற்றி பெறாவிட்டால், அவர் பதவி விலக வேண்டும் என்ற கடுமையான அழுத்தம் அவர் மீது ஏற்படும்.”
