கனடா செய்திகள்

Trump வர்த்தகப் போரைத் தீவிரப்படுத்தும் வேளையில், கனடாவை முன்னிலைப்படுத்துவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அமெரிக்கா செல்கிறார்.

கனடா Conservative கட்சியின் தகவலின்படி, அக்கட்சியின் தலைவர் Pierre Poilievre புதன்கிழமை New York புறப்பட்டுச் செல்கிறார். மேலும், வெள்ளிக்கிழமை நடைபெறும் September 11 பயங்கரவாதத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, New York இல் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பிரதான வணிகத்தளங்கள் பலவற்றின் நேர்காணல்களில் பங்கேற்பதற்கு Poilievre திட்டமிட்டுள்ளார். தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போருக்கு மத்தியில் சீரான வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பிற்காக கோரிக்கை விடுக்கும் தகவலை இதன் மூலம் அவர் வலியுறுத்தவுள்ளார்.

கனடாவின் புதிய பதிலடி வரிகள் செவ்வாய்க்கிழமை அமுலுக்கு வந்தன. அன்றிரவு, அமெரிக்க அதிபர் Donald Trump கனேடியப் பொருட்களுக்கு தடை விதித்தும், குறிப்பிட்ட கனேடியப் பொருட்கள் மீது புதிய வரிகளை விதித்தும் தொடர் நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

மூத்த Conservative கட்சி தகவலின்படி பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுடனேயே Poilievre வின் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. Poilievre முன்பே அமெரிக்கா செல்ல விரும்பினார், ஆனால் அந்தச் சமயத்தில் செல்வது பயனுள்ளதாக இருக்காது என்று பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியதால், அவரது அலுவலகம் அந்த அறிவுரையை ஏற்றுக்கொண்டது.

“September 11, பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதேவேளையில், அத்தாகுதலின் பின்னணியில் கனடாவாசிகளும் அமெரிக்கர்களும் இணைந்து ஆற்றிய பங்களிப்புகளை Poilievre சுட்டிக்காட்டுவார்” என்று Conservative கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித்தலைவரின் இப்பயணத்தில் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான சில சந்திப்புகளும் அடங்கும். Poilievre இந்த ஆண்டின் March மாதத்திலும் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போதைய பயணத்தின் போது அவர் Michigan, Texas, மற்றும் New York ஆகிய இடங்களுக்குச் சென்ற போதிலும், Washington இற்குச் செல்லவில்லை.

Related posts

மீண்டும் தேர்தல் களத்தில் Anita Anand!

canadanews

Ontario உணவு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை குறைக்கின்றன

admin

அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு எச்சரிக்கை விடுத்துள்ள கனேடிய தொழிற்சங்கம்.

canadanews