கனடா செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு சிகிச்சைக்கான யோசனையை திறந்த மனதுடன் பரிசீலிக்கும் Doug Ford.

Ontario முதல்வர் Doug Ford, கட்டாய போதைப்பொருள் ஒழிப்பு சிகிச்சைக்கான யோசனையை தான் திறந்த மனதுடன் பரிசீலிக்கத் தயார் என்று கூறியுள்ளார்.

Ontario வின் பெரிய நகரங்களின் முதல்வர்கள் குழு, கட்டாய சிகிச்சையை விரிவாக்கும் நோக்கில், தற்போதுள்ள மனநலச் சட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு மாகாண அரசிடம் அண்மையில் மீண்டும் கோரிக்கை விடுத்தனர்.

மனநலத்துறைக்கான புதிய இணை அமைச்சராக Michelle Cooper அறிவிக்கும் அமைச்சரவை மாற்றத்தின் போது, வியாழக்கிழமை உரையாற்றிய Ford, “பாதிக்கப்பட்டவர்களுக்கும் நமது சமூகங்களுக்கும் உதவ முடியும் என்றால், இந்த யோசனையை பரிசீலிக்க நான் தயார்,” என்று கூறினார்.

மாகாண அரசாங்கம் தற்போது சிறைச்சாலைகளில் கட்டாய மனநலம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு சிகிச்சை அளிப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது, ஆனால் இதுவரை எந்தவொரு சட்டத்தையும் அமுல்படுத்த முன்வரவில்லை.

COVID-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் மாகாணம் முழுவதும் வீடற்ற நிலையும் போதைப்பழக்கமும் வெகுவாக அதிகரித்துள்ளன, இதன் நிதிச் சுமையை உள்ளூராட்சி சபைகளே பெருமளவில் சுமக்க வேண்டியுள்ளது.

மனநலம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கான மாகாண Liberal கட்சியின் விமர்சகரும், Toronto வின் மனநலம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு மையத்தின் (CAMH) முன்னாள் அதிகாரியுமான Lee Fairclough, கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதும் சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுமே தங்கள் கட்சியின் இலக்கு என்று கூறினார்.

Related posts

Conservative கட்சி Alberta மாகாணத்தின் தனி நாட்டுக் கோரிக்கையை ஆதரிக்காது.

canadanews

Canada Post உடன் மீண்டும் பேசவுள்ள கனேடிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்

canadanews

உற்பத்தி தவறு காரணமாக கார்களை மீளம் பெறும் முன்னணி நிறுவனம்.

canadanews