கனடா செய்திகள்

அமெரிக்காவில் 9/11 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று 25 ஆண்டுகள் நிறைவை நினைவு கூரும் கனடா.

அமெரிக்காவில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், மத்திய Newfoundland இல் ஒரு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

New York இல் உள்ள உலக வர்த்தக மையம், Washington இல் உள்ள பென்டகன் மற்றும் Pennsylvania ஆகிய இடங்களில் கடத்தல்காரர்கள் நான்கு விமானங்களை மோதச்செய்ததை அடுத்து, 6,500-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் 38 விமானங்கள் Newfoundland and Labrador இன் Gander பகுதியில் தரையிறக்கப்பட்டன.

Gander இல் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 9/11 தாக்குதலின் போது கனடாவின் பிரதமராக இருந்த Jean Chretien மற்றும் ஆளுநர் நாயகம் Louise Arbour உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க தூதுவர் Pete Hoekstra வும் உரையாற்றுபவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

குறித்த சம்பவத்தின்போது, Gander பகுதியில் உள்ள மக்கள் தங்களின் அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, தேவாலயங்கள் மற்றும் சமூக மண்டபங்களையும் கட்டில்கள், உணவு மற்றும் ஆடைகளால் நிரப்பி, பல நாட்களாக பயணிகளை அன்புடன் அரவணைத்துப் பராமரித்தனர்.

நாடெங்கிலும் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் கட்டாயமாகத் தரையிறக்கப்பட்ட நிலையில், கனடா முழுவதும் வெளிப்படுத்தப்பட்ட இரக்கத்திற்கும் அன்பிற்கும் இந்நகரம் ஒரு அடையாளமாக மாறியது.

Related posts

கனடாவை மேம்படுத்தும் திட்டங்கள் பலவற்றை MPO-விடம் ஒப்படைக்கின்றார் பிரதமர்.

canadanews

கனமழையால் GTA முழுவதும் ஏற்ப்பட்ட பாரிய வெள்ளம்

admin

மீண்டும் நாடாளுமன்றம் திரும்புகின்றார் Conservative தலைவர் Poilievre.

canadanews