Ottawa நகரசபை ‘Trump Avenue’ என்ற வீதியின் பெயரை மாற்றுவதற்கு வாக்களித்துள்ளது. இதன் மூலம் அந்த வீதியின் அரசியல் ரீதியான சர்ச்சைக்குரிய பெயர் குறித்து நீண்டகால விவாதம் முடிவுக்கு வந்துள்ளதோடு, அமெரிக்க அதிபர் Donald Trump உடனான அதன் குறியீட்டு இணைப்பும் முறைப்படி துண்டிக்கப்பட்டுள்ளது.
பெயர் மாற்றத்தைப் பரிந்துரைத்த ஊழியர்களின் அறிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தகத் தகராறுகளால் கனடா-அமெரிக்க உறவுகள் சுமுகமாக இல்லாத ஒரு சூழலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Ottawa வின் Central Park பகுதியில் அமைந்துள்ள இந்தி வீதி, 1990களின் பிற்பகுதியிலும் 2000களின் தொடக்கத்திலும் முன்னாள் பரிசோதனைப் பண்ணை (Experimental Farm) நிலத்தில் அமைக்கப்பட்ட ஒரு குடியிருப்பு உருவாக்கத்தின் பகுதியாக உருவாக்கப்பட்டது.
இந்த முழு குடியிருப்புப் பகுதியும் New York நகரத்தை கருப்பொருளாகக் கொண்டே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. Manhattan இன் முக்கிய அடையாளங்களின் பெயர்களைக் கொண்டு Manhattan Crescent, Staten Way, Bloomingdale Street, மற்றும் Madison Park உள்ளிட்ட வீதிகளுக்கும் பூங்காக்களுக்கும் பெயரிடப்பட்டன.
அமெரிக்க அதிபருக்கும் கனடா தலைவர்களுக்கும் இடையே சுங்கவரிகள், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் உள்ளாட்சி அரசியலிலும் எதிரொலித்த பகிரங்கக் கருத்துக்கள் தொடர்பாக அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக பதற்றங்கள் அதிகரித்துள்ள சூழலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் வீதிக்கு அமெரிக்க அதிபரைக் குறிப்பிடும் நோக்கில் பெயரிடப்படவில்லை என்றாலும், அப்பெயர் தொடர்ந்து நீடிப்பது குடியிருப்பாளர்களுக்கு ஒரு சங்கடமான விடயமாக மாறியுள்ளதாக Ottawa நகரசபை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
இறுதிப் பெயர் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர், பாதிக்கப்படும் வீட்டு உரிமையாளர்களுடன் கலந்தாலோசிப்பதும் இந்த பெயர் மாற்றும் நடைமுறையில் அடங்கும் என்று நகரசபை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
