Brampton ஐ சேர்ந்த தமிழரான Raghavendra Kumar, தனது 78 வயது தாயார் மாலை நேரம் குடியிருப்புக் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டபோது, திருடர்கள் அவரிடமிருந்து $20,000 மதிப்பிலான நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக கூறியுள்ளார்.
இந்தத் திருட்டுச் சம்பவம் July 28 அன்று மாலை 6 மணிக்குச் சற்று முன்னர் Chinguacousy Road மற்றும் Bovaird Drive West அருகில் உள்ள குடியிருப்பு வீதியில் நடைபெற்றுள்ளது. ஆனால், Toronto பொலிஸார் இதே போன்ற மற்றொரு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரின் காணொளியை வெளியிட்ட பின்னரே, அந்த நபர் CTV News நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார்.
Toronto காணொளியில் காணப்படும் பெண், தனது தாயாரிடம் திருடிய பெண்ணைப் போன்று இருப்பதாக அவர் கூறுகிறார். இருப்பினும், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே தொடர்புள்ளது என்பதை உறுதிப்படுத்த தற்போது எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
CTV News இற்கு வழங்கப்பட்ட கண்காணிப்பு கமரா காணொளியில், முதியவர் ஒருவர் நடைபாதையில் நடந்து செல்வதும், அப்போது வாகனமொன்று அவருக்கு அருகில் வந்து நிற்பதும் தெரிகிறது.
ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரியாத தனது தாயார், தம்மை நெருங்கி வந்த பெண்ணை ஆரம்பத்தில் ஒரு அண்டை வீட்டார் என்றே நம்பியதாக Raghavendra Kumar தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையைப் பெறுவதற்காக, அந்தப் பெண் குனிந்து தனது தாயாரின் பாதங்களைத் தொட்டு வணங்கி, பின்னர் அவரைக் கட்டியணைத்ததாகக் Kumar கூறுகிறார்.
“சுமார் 10 வினாடிகளுக்கு, எனது தாயார் அந்தப் பெண்ணை முழுமையாக நம்பிவிட்டார்” என்று Kumar கூறினார். பின்னர் அந்தப் பெண் தனது தாயாரின் உண்மையான தங்க நகையை கழற்றிவிட்டு, ஒரு போலி நகையை அவரது கழுத்தில் அணிவித்துள்ளார். மேலும், அந்த பெண் வாகனத்தில் தப்பிச் செல்வதற்கு முன்னர் சந்தேக நபர்கள் அவரிடமிருந்த தங்க வளையல்களையும் பறித்துச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
திருடப்பட்ட நகைகள் சுமார் 110 கிராம் எடைகொண்டவை என்றும், அவற்றின் மதிப்பு அண்ணளவாக $20,000 என்றும் Kumar மதிப்பிடுகிறார்.
தனது தந்தை ஒரு பொற்கொல்லர் என்றும், அவரே தனது தாயாருக்காக அந்த நகைகளைச் செய்து அணிவித்ததாக கூறும் Kumar, அந்த நகைகள் தனது தாயாருக்குப் பண மதிப்பை விட மிக அதிகமான உணர்வுப்பூர்வமான மதிப்பைக் கொண்டுள்ளதாக கூறுகின்றார்.
