கனடா செய்திகள்

3 தேர்தல்களில் வாக்களித்த கனேடியர் மீது அமெரிக்காவில் வாக்காளர் மோசடி வழக்கு.

அமெரிக்கக் குடியுரிமை பெற்றுக்கொள்ளாது மூன்று தேர்தல்களில் வாக்களித்ததற்காக, கனேடியர் ஒருவர் மீது அமெரிக்காவில் மூன்று கணக்குகளின் கீழ் வாக்காளர் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

தான் ஓர் அமெரிக்கக் குடிமகள் இல்லை என்பதை அறிந்திருந்தும், Christiane Vinette Young என்பவர் 2024 மற்றும் 2022 பொதுத் தேர்தல்களிலும், 2022 ஆரம்பத் தேர்தல்களிலும் வாக்களித்துள்ளார் என்று Florida இற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

75 வயதான குறித்த நபர் வாக்களித்தபோது அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாக அந்த அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த வழக்கு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் (Homeland Security) விசாரிக்கப்பட்டது என்றும், குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவராகவே கருதப்படுவார் என்றும் அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தெரிவிக்கிறது.

Related posts

புலம்பெயர்ந்தோரைப் பாதிக்கும் கனேடிய அரசாங்கம் அறிமுப்படுத்தப்படும் புதிய மசோதா.

canadanews

வெளிநாட்டு தலையீட்டை எதிர்கொள்ள Trudeau அரசாங்கம் தயாராகிறது

admin

கனடாவின் canola பொருட்கள் உட்பட விவசாய உற்பத்திகள் மீதான வரியை நீக்க சீனா தயாராக உள்ளது.

canadanews