கனடாவுக்கு எதிர்காலத்தில் குறைந்த விலையில் டீசல் விநியோகம் கிடைப்பதை உறுதி செய்யவும், டீசல் மீதான மத்திய அரசாங்கத்தின் வரிகளைக் குறைக்கவும் Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre திட்டம் ஒன்றை முன்மொழிந்து வருகிறார்.
தேசிய தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு கனடா ஏற்கனவே போதுமான டீசலை உற்பத்தி செய்வதாகவும், ஆனால் போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக சில பகுதிகள் அமெரிக்க இறக்குமதிகளைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படுவதாகவும் Conservative கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, கடந்த April மாதத்தில், Ottawa மத்திய அரசாங்கத்தின் கூட்டாட்சி எரிபொருள் கலால் வரியை தற்காலிகமாக இடைநிறுத்தியது. இந்த இடைநிறுத்தத்தை January மாதம் வரை நீடித்துள்ள அரசாங்கம், February 1 முதல் 2027 March 31 வரை வழக்கமான கலால் வரி விகிதத்தில் 50 சதவீதத்தை வசூலிக்க உள்ளது.
அடுத்த ஆண்டு July 1 ஆம் திகதி வரை முழுமையான எரிபொருள் கலால் வரி குறைப்பை நீட்டிப்பதன் மூலமும், எரிபொருள் கொள்முதல் மீதான பெறுமதிசேர் வரியை நீக்குவதன் மூலமும், குறைந்தபட்சம் கனடா தினம் வரை டீசல் விற்பனை மீதான அனைத்து வரிகளையும் நீக்க Poilievre முன்மொழிகிறார்.
டீசல் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளுக்கான புதிய முதலீடுகளுக்கு முட்டுக்கட்டையாக அமைவதுடன், டீசல் உற்பத்திச் செலவையும் உயர்த்துகின்ற காரணிகளான, மத்திய அரசாங்க தொழில்முறை காபன் வரி மற்றும் தூய எரிபொருள் தரநிலை (Clean Fuel Standard) ஆகியவற்றை நிரந்தரமாக இரத்துச் செய்வதன் மூலம், டீசல் உற்பத்தி மீதான அனைத்து வரிகளையும் அகற்ற வேண்டும் என்றும் Poilievre வலியுறுத்துகிறார்.
இந்த ஒட்டுமொத்தத் திட்டமும் சுத்திகரிப்புத் திறனை விரிவுபடுத்தும் என்றும், சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் அதிக கனேடிய கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்க உதவும் என்றும், ஒவ்வொரு பகுதிக்கும் எரிபொருள் விநியோகம் செய்யத் தேவையான போக்குவரத்து மற்றும் சேமிப்பு உட்கட்டமைப்பை உருவாக்க உதவும் என்றும் Conservatives கட்சியினர் கூறுகின்றனர்.
Poilievre வின் இந்த முன்மொழிவுகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்குமாறு கோரப்பட்டதற்கு, பிரதமர் அலுவலகத்திலிருந்து உடனடியாக எந்தப் பதிலும் வரவில்லை.
