கனடாவின் Toronto மாநகர முதல்வர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Chris Alexander, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகக் கூறி தனது பிரசாரத்திலிருந்து விலகியுள்ளார்.
முன்னதாக நடைபெற்ற கருத்துக்கணிப்புகளில் அவர் மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில், தனது பிரசாரம் எதிர்பார்த்த அளவில் முன்னேற்றம் அடையவில்லை என்றும், முன்னிலையில் உள்ள வேட்பாளர்களை இனி எட்டிப் பிடிப்பதற்கான வாய்ப்பைக் காணவில்லை என்றும் Alexander தெரிவித்துள்ளார்.
அவர் எந்தவொரு வேட்பாளருக்கும் தனது ஆதரவைத் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, Toronto மாநகர முதல்வர் தேர்தல் தற்போதைய முதல்வர் Olivia Chow மற்றும் நகரசபை உறுப்பினர் Brad Bradford ஆகியோருக்கு இடையிலான போட்டியாக மாறியுள்ளது.
Toronto மாநகர முதல்வருக்கான நகரசபைத் தேர்தல் October 26, 2026 அன்று நடைபெற உள்ளது. முன்கூட்டிய வாக்களிப்பு October 6 முதல் 11 வரை நடைபெறுகிறது.
