கனடா செய்திகள்

Los Angeles சர்வதேச விமான நிலையத்தில் Air Canada விமானத்தை மோதிய Delta விமானம்.

கனடாவின் Toronto நகரிலிருந்து Los Angeles சென்ற Air Canada AC785 விமானம், Los Angeles சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தரையிறங்கிய பின்னர், மற்றொரு விமானத்தால் மோதப்பட்டது.

சுமார் காலை 10.30 மணியளவில், Tokyo நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த Delta Flight 7 விமானம் taxiway-யில் நகர்ந்துகொண்டிருந்தபோது, அதன் இடது இறக்கையின் முனைப்பகுதி (left wingtip) Air Canada விமானத்தின் வால் பகுதியில் உள்ள horizontal stabilizer-ஐ உரசியது. அந்த நேரத்தில் Air Canada விமானம் gate-க்கு இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தது.

இந்தச் சம்பவத்தில் பயணிகள் அல்லது விமானப் பணியாளர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இரு விமானங்களும் பரிசோதனை மற்றும் தேவையான பழுதுபார்ப்புகளுக்காக சேவையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன. சம்பவத்தின் போது, Delta விமானத்தில் 275 பயணிகளும் 15 பணியாளர்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக அமெரிக்க Federal Aviation Administration (FAA) விசாரணையைத் தொடங்கியுள்ளது. LAX விமான நிலையத்தின் வழக்கமான விமானச் சேவைகள் தொடர்ந்து நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோதலில் தொடர்புடைய Air Canada விமானம் சேவையிலிருந்து நீக்கப்பட்டு, முழுமையான பரிசோதனை மற்றும் பழுதுபார்ப்பு பணிகளுக்கு உட்படுத்தப்பட உள்ளது. அதேபோல், Delta விமானத்தையும் அதன் பராமரிப்புப் பணியாளர்கள் மற்றும் விமான நிலையக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related posts

கனேடிய அரசாங்கம் ஊழியர்களுக்கு பணிநீக்கங்கள் குறித்த அறிவிப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளன.

canadanews

2024 வரவு செலவு பட்டியலின் படி Ontario வாகனக் காப்பீட்டு மாற்றங்களை உறுதியக்கின்றது

admin

Trump இன் Bombardier விமான நிறுவன அச்சுறுத்தல்களுக்கு Quebec மாகாண முதல்வர் பதிலடி.

canadanews