அண்மைய கருத்துக்கணிப்பின்படி, Toronto மாநகர முதல்வர் தேர்தலில் தற்போதைய முதல்வர் Olivia Chow முன்னிலை வகித்தாலும், அவருக்கும் Brad Bradford இற்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 4 சதவீதப் புள்ளிகளாக குறைந்துள்ளது.
தற்போது வெளிவந்துள்ள கருத்துக்கணிப்பின்படி ஒவ்வொரு வேட்பாளரையும் நோக்கி சாய்ந்துள்ள வாக்காளர்களின் முடிவுகளின்படி Chow விற்கு 46%, Brad Bradford இற்கு 42% ஆதரவும் கிடைத்துள்ளது. மீதமுள்ள 12% பேர் வேறு வேட்பாளருக்கு வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பு October 6ஆம் திகதி 1,604 Toronto வாக்காளர்களிடம் நடத்தப்பட்டது. September 25ஆம் திகதி வரையிலான முன்னைய கருத்துக்கணிப்பில் Chow 46% ஆதரவுடனும், Brad Bradford 35% ஆதரவுடனும் இருந்த நிலையில், தற்போது போட்டி கணிசமாக நெருக்கமாகியுள்ளது.
Chris Alexander போட்டியிலிருந்து விலகியுள்ள நிலையில், Chow மற்றும் Brad Bradford இற்கு இடையிலான போட்டி மேலும் தீவிரமடைந்துள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
