Chris Alexander முதல்வர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகியுள்ளதுடன், Brad Bradford தொடர்ந்து ஆதரவைப் பெற்று வருவதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. இதனால், ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை Olivia Chow நன்கு அறிந்திருக்கிறார்.
ஆனால், செவ்வாய்க்கிழமை முன்கூட்டியே வாக்களிக்கும் நிலையங்கள் திறக்கப்பட்டபோது, அவரே தவறான மற்றுமொரு “Chow” வேட்பாளருக்கு வாக்களிக்க முனைந்தார்.
வாக்குச்சீட்டில் Olivia Chow வின் பெயர் 9-வது இடத்தில் உள்ளது. அவருக்கு முன்னைய 8-வது இடத்தில், Braeden Chow என்ற வேட்பாளர் உள்ளார்.
“வாக்குச்சீட்டில் இரண்டு ‘Chow’ வேட்பாளர்கள் இருப்பதையும், அவர்களில் ஒருவர் எனக்கு முன்பாக இருப்பதையும் இப்போதுதான் கவனித்தேன்,” என்று தனது வாக்கை பதிவு செய்த பின்னர் Olivia Chow கூறினார்.
அவரது தேர்தல் பிரசாரக் குழுவின் கவலை என்னவென்றால், ஏனைய வாக்காளர்களும் தவறான பெட்டியில் குறியிடக்கூடும் என்பதாகும். கடும் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், முக்கியமான வாக்குகள் தவறுதலாக தவறான வேட்பாளருக்குச் செல்லக்கூடும்.
இதனால், வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு அவரது பிரசாரக் குழு சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட்டுள்ளதுடன், பொதுமக்களுக்கு மின்னஞ்சல் ஒன்றையும் அனுப்பியுள்ளது.
