கனடா செய்திகள்

எரிபொருள் வரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், அதிக வருமானம் கொண்ட குடும்பங்களுக்கே அதிக நிதிச்சலுகை கிடைக்கிறது

கனேடிய அரசாங்கம் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருட்களுக்கான மத்திய அரசின் excise tax-ஐ தற்காலிகமாக நிறுத்தியுள்ள நிலையில், இந்த வரிச்சலுகையால் அதிக வருமானம் பெறும் குடும்பங்களுக்கே அதிக நன்மை கிடைக்கிறது என நாடாளுமன்ற வரவுசெலவுத்திட்ட அதிகாரி (PBO) தெரிவித்துள்ளார்.

இந்த வரிச்சலுகை அமுலில் இருக்கும் காலத்தில், ஒரு குடும்பத்திற்கு சராசரியாக $276 வரை சேமிப்பு கிடைக்கும். ஆனால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சராசரி சேமிப்பில் சுமார் பாதி மட்டுமே கிடைக்கும்.

அதிக வருமானம் உள்ள குடும்பங்கள் பொதுவாக அதிக எரிபொருள் பயன்படுத்துவதால், அவர்களுக்கு கிடைக்கும் சேமிப்பும் அதிகமாகிறது.
இதனால், எரிபொருள் விலை உயர்வால் குறைந்த வருமானக் குடும்பங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டாலும், இந்த குறிப்பிட்ட வரிச்சலுகை அவர்களுக்கு ஒப்பீட்டளவில் குறைவான பயனையே வழங்குகிறது.

கனேடிய அரசாங்கம், இந்த வரிச்சலுகை அனைவருக்கும் சமமாக வழங்கப்படுவதாகவும், குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு Groceries and Essentials Benefit போன்ற தனிப்பட்ட உதவித் திட்டங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளது.

எனவே, எரிபொருள் வரி நிறுத்தம் அனைவருக்கும் நன்மை அளித்தாலும், அதிகமாக எரிபொருள் வாங்கும் அதிக வருமானக் குடும்பங்களே அதிக பணத்தைச் சேமிக்கின்றனர்.

மத்திய Conservatives கட்சி, இந்த வரிச்சலுகையை மேலும் நீட்டிப்பதுடன், டீசல் உற்பத்தியுடன் தொடர்புடைய சில கட்டணங்களையும் குறைக்க இந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன்வைத்தது. ஆனால், புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் நாடாளுமன்றத்தில் உள்ள ஏனைய கட்சிகள் குறித்த முன்மொழிவை நிராகரித்தன.

Related posts

தென்கொரியாவுடன் இணைந்து கடற்படையை பலப்படுத்துகிறதா கனடா?

canadanews

தொலைபேசிப் பாவனை ஆரம்பித்து 40 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த கனடா.

canadanews

Quebec Liberal கட்சித் தலைவர் Pablo Rodriguez பதவி விலகினார்.

canadanews