கனடா செய்திகள்

ஜேர்மனியுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் கனடா.

அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்கள் காரணமாக கனடாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 2017 இல் கையெழுத்திட்ட வர்த்தக ஒப்பந்தமான CETA எனப்படும் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் அதிக ஆர்வமாக இருப்பதாக கனடாவுக்கான ஜேர்மனியின் தூதுவர் Tjorven Bellmann தெரிவித்துள்ளார்.

பசுமை ஆற்றல் போன்ற துறைகளில் இரு நாடுகளும் முன்னேற விரும்புவதால், வர்த்தகத்தை அதிகரிப்பதில் கனேடிய பல்கலைக்கழகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என்று அவர் மேலும் கூறினார்.

கனடா 2022 ஆம் ஆண்டு hydrogen ஏற்றுமதி செய்வதற்காக German உடன் செய்துகொண்ட ஒப்பந்தம் மற்றும் German இல் நடைபெற்ற பல்வேறு கண்காட்சிகளில் கனடா கலந்து கொண்டமை போன்றன Canada – Germany வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

கனடிய நிறுவனங்களுக்கு புதிய வழங்குனர்கள், புதிய சிந்தனையாளர்களை சந்திக்க இது ஓர் வாய்ப்பாக அமைவதுடன் செயற்கை நுண்ணறிவு quantum technology மற்றும் robotics போன்றவற்றைக் கற்றுக்கொள்வதுடன் Germany இன் பரந்த வாகன மற்றும் இயந்திரத் துறைகளில் உள்ள நிறுவனங்களுடன் கூட்டுச்சேரவும் சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த மாத தொடக்கத்தில், Germany’s diplomatic missions and trade agency வெளியிட்ட Canadian-German கூட்டறிக்கையில் கனடாவுடன் அதிக வர்த்தகம் மற்றும் முதலீடுகளை செய்வதற்கு Berlin விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கனேடிய பொருளாதார வல்லுனர்களால் அதிக வட்டி விகிதக் குறைப்புக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன

admin

2020 இல் நடந்த மோசடியான Belarus தேர்தலின் ஆண்டு நிறைவையொட்டி கனடா அபராதம் விதிப்பு

admin

wheels coming off அபாயம் காரணமாக கனடாவில் 300க்கும் மேற்பட்ட வாகனங்களை Porsche நிறுவனம் திரும்பப் பெறுகிறது

admin