கடந்த ஆண்டு இறுதியில் ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அழைத்த தொழிலாளர்களின் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இந்த வார இறுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது 55,000 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் சிறிதளவு அர்த்தமுள்ள நகர்வைக் கூட காட்டவில்லை என்று Canada Post குற்றம் சாட்டுகிறது.
Crown corporation ஞாயிற்றுக்கிழமை அறிக்கையொன்றின் மூலம், செயல்படுத்தக்கூடியதும் மலிவானதுமான வார இறுதி விநியோக மாதிரியை முன்வைத்ததாகக் கூறுகிறது. இது அர்ப்பணிப்புள்ள பகுதிநேர பணியாளர்களைப் பயன்படுத்தி parcel விநியோகத்தை போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றும் என்றும் கூறுகிறது.
Canada Post எதிர்கொள்ளும் குறிப்பிடத்தக்க சவால்களை கனேடிய தபால் தொழிலாளர்கள் சங்கம் (CUPW) ஒப்புக்கொள்ளத் தவறியதால் இந்த வார இறுதியில் எதுவித ஒப்பந்தத்தையும் எட்ட முடியாதெனவும் Canada Post கூறுகிறது.
ஆனால் Canada Post தீவிரமான வேலைநிறுத்தங்களுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகிறது என்று தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. எப்படி இருந்தபோதும் Canada Post எதிர்கொள்ளும் கட்டமைப்பு மற்றும் வணிகப் பிரச்சினைகளைக் கவனிக்கும் கூட்டாட்சி விசாரணையின் ஒரு பகுதியாக இரு தரப்பினரும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.