April 01 ஆம் திகதி தொடக்கம் எரிபொருட்களின் மீதான விலையை பூச்சியமாக நிர்ணயிப்பதற்கான ஒரு ஒழுங்குமுறையை இயற்றுவதன் மூலம் நுகர்வோர் carbon விலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயல்முறையை பிரதமர் Mark Carney தொடங்கியுள்ள நிலையில், Conservative அரசாங்கம் நுகர்வோர் மற்றும் பெரிய தொழில்துறைக்கான முழு கார்பன் விலைச் சட்டத்தையும் இரத்து செய்யும் என்று Pierre Poilievre கூறியுள்ளார்.
தாராளவாதிகள் இந்தக் குற்றச்சாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதில் உறுதியாக இருந்தால் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதன் மூலம் சட்டத்தினால் அதனைச் செய்யலாம் என்று Poilievre மேலும் கூறினார்.
சூரிய சக்தி, battery சேமிப்பு அல்லது மின்சார வாகனங்களை உருவாக்கும் தொழில்துறை ரோபோக்கள் போன்ற சுத்தமான தொழில்நுட்பத்தை உருவாக்கும் உற்பத்தி மற்றும் செயல்பாட்டில் முதலீட்டை ஊக்குவிக்க உதவும் நோக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளில் லிபரல்கள் சுத்தமான தொழில்நுட்பம் மற்றும் சுத்தமான தொழில்நுட்ப உற்பத்தி வரிச் சலுகைகளை அறிமுகப்படுத்தினர். அத்துடன் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் Poilievre இன் திட்டத்தை மோசமான கொள்கை என எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர் Jonathan Wilkinson விமர்சித்தார்.
industrial pricing system 50,000 தொன்களுக்கு மேலதிகமான carbon dioxide வெளியிடும் வணிகங்களுக்கே பொருந்தும் குறித்த வரம்பிற்கு கீழ் உள்ளவை விற்கவோ அல்லது சேமிக்கவோ முடியுமான வசதியுடைய கிரெடிட்களைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த விடயத்தில் Manitoba, Prince Edward Island, Yukon மற்றும் Nunavut ஆகிய மாகாணங்களே கூட்டாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளை பின்பற்றுகின்றன. ஏனைய மாகாணங்கள் அவற்றின் சொந்த கார்பன் விலை நிர்ணயத் திட்டங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் கீழ் carbon dioxide வெளியிடும் வீதத்தை
2025 இல் இருந்ததை விட 2030 ஆம் ஆண்டுக்குள் 40 முதல் 45 சதவீதமாகக் குறைப்பதே மத்திய அரசின் நோக்கமாகும். 2050 ஆம் ஆண்டுக்குள் இதனை பூஜ்ஜியமாக பேணுவதே அரசின் நீண்ட கால இலக்கும் ஆகும்.