கனடா செய்திகள்

Ottawa நகரில் பாராளுமன்ற தொகுதிக்குள் நுழைந்த நபரால் பரபரப்பு.

Ottawa சேரந்த 31 வயதுடைய பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் சனிக்கிழமை பாராளுமன்ற கிழக்குத் தொகுதிக்குள் நுழைந்து தன்னைத்தானே முற்றுகையிட்டுக் கொண்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாலை நேரம்வரை நிலைமை தொடர்ந்ததால் canine unit மற்றும் explosives units போன்ற சிறப்புப் பிரிவுகளையும் பொலிஸார் வரவழைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது அத்துடன் இரண்டு வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு ரோபோக்களும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தது.

Parliamentary Protective Service (PPS) மற்றும் Ottawa Police Service (OPS)  ஆகியவற்றின் பல மணிநேர கடும் பிரயத்தனத்தின் பின்னர் அமைதியாக சரணடைந்த குறித்த நபர் security screening பகுதிக்குள் தனிமைப்படுத்தப்பட்டு பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் அவரிடம் வெடிபொருட்களோ, ஆயுதங்களோ அல்லது ஆபத்தான பொருட்களோ எதுவும் இருக்கவில்லை என்று பொலிஸார் குறிப்பிப்பிட்டனர்.

குறித்த நபர் ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். கிழக்குத் தொகுதியில் செனட்டர்கள் மற்றும் அவர்களது ஊழியர்களின் அலுவலகங்கள் உள்ளன. federal election
காரணமாக நாடாளுமன்றம் தற்போது கலைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

லிபரல் கட்சியின் தலைமைத்துவத்திற்கான போட்டியிலிருந்து விலகினார் Jaime Battiste

canadanews

உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவதில் கனடா ஒரு பங்கை வகிக்க வேண்டும்!

canadanews

Trudeau D-Day இன் 80 ஆவது நிறைவை France இன் Juno Beach இல் கொண்டாடவுள்ளார்

admin