லிபரல் கட்சியின் தலைவராக Mark Carney தெரிவு செய்யப்படுவதற்கு சற்று முன்னர் கட்சியினர் மத்தியில் உரையாற்றிய Justin Trudeau இது ஒரு தேசத்தை வரையறுக்கும் தருணம். ஜனநாயகம் என்பது கொடுக்கப்பட்டதல்ல. சுதந்திரமும் கொடுக்கப்பட்டதல்ல. கனடா என்பதும் கொடுக்கப்பட்டதல்ல. அவற்றில் எதுவும் தற்செயலாக நடக்காது. அவற்றில் எதுவும் முயற்சி இல்லாமல் தொடராது என்றும் கூறினார்.
எனவே அதற்கு எமக்கு தைரியம், தியாகம் என்பன தேவை அத்துடன் நம்பிக்கை மற்றும் கடின உழைப்புக்களால்தான் எமது தேசத்தை கட்டியெழுப்பலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட பத்து வருடங்களாக கனடாவின் பிரதமராக பதவி வகித்த Trudeau உலகளாவிய தொற்றுநோய், கனடாவின் மிக முக்கியமான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து சீர்குலைந்த புவிசார் அரசியல் சூழல் ஆகியவற்றின் மூலம் நாட்டை வழிநடத்திய ஓர் தலைவராவார்.
Ottawa பள்ளத்தாக்கைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வரலாற்று ஆசிரியரான Tina Noel குறித்த மாநாட்டில் உரையாற்றும்போது Trudeau வின் ராஜினாமாவுக்கு வழிவகுத்த லிபரல் கட்சியின் ஒரு சவாலான காலத்திற்குப் பின்னர் அவர் உயர்ந்த நிலையில் இருந்து வெளியேறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று கூறினார்.
உட்கட்சி பூசல்கள் காரணமாக January 06 ஆந் திகதி Trudeau தனது பதவியை துறந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் லிபரல் தலைவராக தனது இறுதி உரையை நிகழ்த்துவதற்கு முன்னர் அவரது மகள் Ella Grace Trudeau அவரை அறிமுகம் செய்தார்.
அப்பாவை நான் வீட்டில் அதிகமாகவும் Online இல் குறைவாகவும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் என்றார் ஆனால் கடந்த சில வருடங்களை நான் எதற்கும் விலை கொடுக்க மாட்டேன். என்றும், அப்பா உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் எனவும் அவரது மகள் விழித்தார்.
Trudeau, பிரியாவிடையிலும் தனது சொந்த சாதனைகளை பற்றி பேசுவதை விட கட்சியின் எதிர்காலத்தைப் பற்றியே அதிக கவனம் செலுத்தினார். அண்மைக்காலமாக தனது பதவிக்காலம் நிறைவிற்கு வருவதையிட்டு கவலையுடன் பேசிவந்தாலும் தனது வேலையிலும் கனடியர்களுக்கு சேவை செய்வதிலும் கவனம் செலுத்தி விடைபெறுகின்றார்.