கனடா செய்திகள்

பிரதமர் Carney இன் முதலாவது வெளிநாட்டு பயணம்

கனடாவின் பிரதமராக பதவியேற்றுள்ள Mark Carney தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக எதிர்வரும் நாட்களில் France மற்றும் U.K. ஆகிய நாடுகளுகக்கு செல்லவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரு நாட்டு தலைவர்களின் அழைப்பின் பேரிலேயே பிரதமரின் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. பயணத்தின் போது வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக இருநாடுகளுடனும் கலந்துரையாடவுள்ள Carney தனது U.K. பயணத்தின் போது மன்னர் Charles ஐயும் சந்திக்கவுள்ளதுடன் கனடாவின் AI துறையை வளர்ப்பது தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளார்.

அமெரிக்காவிற்குச் செல்லும் திட்டம் எதுவும் தற்போதுவரை திட்டமிடப்படவில்லை எனக்கூறும் பிரதமர் அலுவலகம் பொருத்தமான தருணத்தில் அமெரிக்க ஜனாதிபதியுடன் பேச பிரதமர் ஆவலுடன் இருப்பதாகவும் கூறியுள்ளது.

Carney பிரதமராக பதவியேற்ற முதலாவது செய்தியாளர் சந்திப்பில் தனது அரசாங்கம் பொருளாதாரத்தை வளர்ப்பதிலும், வாழ்க்கையை மிகவும் மலிவு விலையில் மாற்றுவதிலும், நாட்டை மிகவும் பாதுகாப்பானதாக்குவதிலும் கவனம் செலுத்தும் என்றார்.

Related posts

Trudeau மற்றும் பிற கூட்டாட்சி தலைவர்களுக்கு online கொலை மிரட்டல்கள் விடுத்ததாக இரண்டு Albertans மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

admin

அமெரிக்க வரிகளை எதிர்கொள்ள நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரும் எதிர்க்கட்சி

canadanews

கூடிய விரைவில் கூட்டாட்சித் தேர்தலை நடத்த முயற்சிப்பதாக Poilievre உறுதியளிக்கிறார்

admin