மாகாணம் முழுவதும் வாகனத் திருட்டு குற்றங்களின் அதிகரிப்பைக் குறைக்க, குற்றங்களுக்குத் தண்டனை பெற்றவர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை இடைநிறுத்த Ford அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இச் சட்டம் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இச் சட்டமானது நடைமுறைக்கு வந்ததும், வாகனத் திருட்டு குற்றத்தில் ஈடுபட்டவர்களில் முதல் குற்றத்திற்கு 10 ஆண்டு உரிமம் இடைநீக்கத்தையும், இரண்டாவது குற்றத்திற்கு 15 ஆண்டு இடைநீக்கத்தையும், மூன்றாவது குற்றத்திற்கு வாழ்நாள் இடைநீக்கத்தையும் சந்திக்க நேரிடும்.
கடுமையான வாகன திருட்டு அபராதங்களுக்கு மேலதிகமாக stunt driving இற்கான தண்டனைகளை வலுப்படுத்தவும் Ford அரசாங்கம் முன்மொழிகிறது. இதன் படி stunt driving குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சமாக முதல் தண்டனைக்கு ஒரு வருடம், இரண்டாவது தண்டனைக்கு மூன்று ஆண்டுகள் மற்றும் மூன்றாவது தண்டனைக்கான 10 ஆண்டுகளாக கட்டாய உரிமம் இடைநீக்கம் விதிக்கப்படும்.
2023 ஆம் ஆண்டில், தெருப் பந்தயம் மற்றும் ஸ்டண்ட் stunt driving ஆகியவற்றிற்காக 12,000 க்கும் மேற்பட்ட உடனடி சாலையோர உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.